×
 

டூ வீலரில் வந்து தூர்வாரும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் என்.ஆனந்த்!! காரணம் தான் ஹைலைட்!

சென்னையில் உள்ள அடையாறு, கூவம் ஆறுகளை தூர்வாறும் பணியை அமைச்சர் என். ஆனந்த் இன்று கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார்.

சென்னையில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, அடையாறு மற்றும் கூவம் ஆறுகள் உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. சென்னை கோயம்பேடு அருகே பாடிகுப்பம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் பணிகளை தொடங்கி வைத்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

காலை 8.45 மணிக்கு தூர்வாரும் பணிகளை தொடங்கி வைக்க அமைச்சர் காரில் புறப்பட்டிருந்தார். ஆனால், கோயம்பேடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், திட்டமிட்ட நேரத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தாமதத்தை தவிர்க்கும் வகையில் அமைச்சர் தனது காரில் இருந்து இறங்கி, அங்கிருந்த தவெக நிர்வாகியின் ஸ்கூட்டரை வாங்கி தானே ஓட்டிச் சென்றார்.

ஹெல்மெட் அணிந்தபடி ஸ்கூட்டரில் அமைச்சர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை வந்தடைந்தது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முதலில் ஸ்கூட்டரில் வந்தவர் அமைச்சர் என்பதை பலரும் அடையாளம் காணவில்லை. பின்னர் அவர் வாகனத்தில் இருந்து இறங்கியதும் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் அவரை வரவேற்றனர்.

இதையும் படிங்க: "பாப்கார்ன் சாப்பிட மட்டும் வாய் திறக்கிறாரே?”... புஸ்ஸி ஆனந்தை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

அதனைத் தொடர்ந்து, கூவம் ஆற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார். பின்னர் பணிகள் நடைபெறும் பகுதிக்குள் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளையும் வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வெள்ளப்பெருக்கு அபாயத்தை குறைக்கும் நோக்கில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. இந்தப் பணிகள் மழைக்காலத்தில் நீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ஆனந்த் போக்குவரத்து நெரிசலை பொருட்படுத்தாமல், நேரம் தவறாமல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஸ்கூட்டரில் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: "முதல்வரின் நம்பிக்கை தளபதி"..! பிறந்தநாளில் CM விஜயை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் ஆனந்த்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share