SIR ஜனநாயக படுகொலை... பாத்துட்டு சும்மா இருக்க முடியாது...! முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!
SIR மூலம் நிகழ்த்தப்படும் ஜனநாயக படுகொலையை தடுக்க வேண்டியது அனைவரது கடமை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறப்பு வாக்காளர் திருத்தத்தை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் SIR பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் கொடுத்தது. இதனிடையே, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி நடைபெறுவதாக பல அரசியல் கட்சிகள் தெரிவித்தது. வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டமானது தியாகராய நகரில் உள்ள ஓட்டல் அகார்டில் நடைபெற்றது. இதனிடையே சிறப்பு வாக்காளர் திருத்தம் தொடர்பாகவும் அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் SIR-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை என்று தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள், ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை ECI ஏற்காததால், உச்சநீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: SIR பணிகளை நிறுத்தி வைக்க கோரி தீர்மானம்... அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த அதிரடி முடிவு…!
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய உணர்வைப் பதிவு செய்த 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் தங்களுடைய கட்சிகளில் SIR குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: NRC தான் அவங்க குறிக்கோள்... SIR குடியுரிமை மீதான தாக்குதல்... உடைத்து பேசிய திருமா