இப்படியே போனா எப்படி? 35 மீனவர்கள் கைது.. உடனே நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!
மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு சிக்கலான பிரச்சினையாக உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கடல் எல்லையான பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது வழக்கமாகி உள்ளது. தமிழக மீனவர்கள் கைது செய்ய ப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இருநாட்டினரும் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான கடல் எல்லை, சர்வதேச கடல் எல்லைக் கோடு மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த எல்லை பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் வெறும் 12 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது. இந்தப் பகுதி மீன்வளம் மிக்கது என்பதால், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், குறிப்பாக ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி போன்ற கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.
ஆனால், கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்கிறது, அவர்களின் படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்கிறது. இதனிடையே, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் என 35 பேர் கைது செய்த இலங்கை கடற்படையினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மீனவர்களையும் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இதையும் படிங்க: நடுநடுங்க வைக்கும் கொடூரம்... பெண்கள் தலைக் காட்ட முடியல.. கொதித்தெழுந்த தமிழிசை...!
மீனவர்களின் வாழ்வையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் கடலுடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளது என்று தெரிவித்தார். தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படுவது தமிழக மீனவ சமூகத்தை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று கூறினார் . தற்போதைய நிலவரப்படி 114 மீனவர்கள், 247 படகுகள் இலங்கை வசம் உள்ளதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இதையும் படிங்க: இது பாலியல் மாடல் ஆட்சி… வாயை திறங்க ஸ்டாலின்..! வாட்டி எடுத்த நயினார் நாகேந்திரன்…!