×
 

#BREAKING: தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கைதான்! தமிழக முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகள் பேசிய அவர், முற்போக்கு சிந்தனைகளுடன் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் கல்விக்குள் நுழைவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். மாநில கல்விக் கொள்கையில் கல்வியுடன் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

மதிப்பெண்களை நோக்கி அல்ல மதிப்பீடுகளை நோக்கி பயணமாக அமைக்கப்படும் என கூறினார். பள்ளிகள் எல்லோருக்கும் ஆனதை யாரும் புறக்கணிக்கப்படக்கூடாது என்றும் விரும்பும் கல்வி பெறுவதற்கான வாசலை நமது கொள்கை திறந்து வைக்கும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்..!

மேலும் தமிழக பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கையை கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவித்தார். தமிழும் ஆங்கிலமும் என இரு மொழிக் கொள்கைதான் நமது உறுதியான கொள்கை என்றும் முதலமைச்சர் கூறினார். 

தமிழக வரலாற்றில் இது ஒரு சிறப்பு வாய்ந்த விழா என்றும் கூறிய முதல்வர், பள்ளி மாணவர்களைப் பார்த்தாலே எனர்ஜி வந்துவிடும் என்று கூறினார். 

மாணவர்களை ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போது கல்வி முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி வருவதாகவும் 100% உயர்கல்வி கற்க வேண்டும் என்பதை நமது இலக்கு எனக்கு கூறினார். 

முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் நுழைய வேண்டும் என்றும் 93 முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் 901 மாணவர்கள் படிப்பதாக கூறினார்.

மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டதில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தொலைநோக்கு பார்வையுடன் கல்வி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மனப்பாடம் செய்யும் மாணவர்கள் அல்லாமல் சிந்திக்கும் மாணவர்களை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: #SEP: மாநில கல்விக் கொள்கை ரெடி... நாளை முதல்வர் வெளியிட உள்ளதாக தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share