×
 

இது தாயா இல்ல பேயா??... மூச்சுக்குழாய்க்குள் டிஸ்யூ பேப்பரை அழுத்தி... பச்சிளம் பெண் குழந்தையை துடிதுடிக்க கொன்ற அம்மா...!

குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் பகுதியில் பிறந்து 42 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை தாயார் சுவாச குழாயில் டிஸ்யூ பேப்பரை வைத்து மூச்சடக்கி கொலை. போலீசார் தாயார் பெனிட்டா ஜெய அன்னாளை கைது செய்து விசாரணை.

குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் பகுதியை சேர்ந்தவர் 20 வயதான பெனிட்டா ஜெய அன்னா, பள்ளிப்படிப்பை முடித்த பெனிட்டா ஜெய அன்னா இன்ஸ்டாகிராம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு அவரது ஏற்பாட்டின் பேரில் சென்னைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

சென்னையில் பணிபுரிந்து வந்த பெனிட்டா ஜெய அன்னா அங்கிருந்து இடமாறுதல் ஆகி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். அங்கு இன்ஸ்டாகிராம் தோழியின் கணவரின் நண்பனான கார்த்திக் 21 என்பவருடன் காதல் ஏற்பட்டு கடந்த 1 வருடத்திற்கு முன் இருவரும் திருமணம் செய்துள்ளனர். 

பெனிட்டா ஜெய அன்னா காதல் திருமணம் செய்தது பெற்றோருக்கு பிடிக்காமல் போக அவர் கணவருடன் தங்கி இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பெனிட்டா ஜெய அன்னா கர்ப்பம் தரித்து கடந்த 42 தினங்களுக்கு முன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையை பெனிட்டா ஜெய அன்னா பெற்றெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தேர்தல் வெற்றியே இலக்கு... செப்.16ல் கூடுகிறது பாஜக மையக் குழு கூட்டம்!

குழந்தை பிறந்த கையோடு பெனிட்டா ஜெய அன்னா தனது கணவர் கார்த்திக்குடன் பாலூர் பகுதியில் உள்ள தாயார் வீட்டிற்கு வந்து தங்கி இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் கணவர் கார்த்திக் தனது தாயாரை பார்க்க திண்டுக்கல் சென்றுவிட்டு மறுநாள் காலை மனைவியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த கார்த்திக் நேராக தனது குழந்தையை தூக்கி கொஞ்சுவதற்க்காக சென்ற போது குழந்தை பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளது. மேலும் குழந்தையின் தலை நெற்றியில் காயமும் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் குழந்தை தலையில் என்ன காயம் என்று கேட்டுள்ளார். அதற்கு பெனிட்டா ஜெய அன்னா குழந்தைக்கு பால் கொடுக்கும் போது காலால் உந்தி கீழே விழுந்தது. இதில் காயம் ஏற்பட்டது என்று நாடகமாடி உள்ளார் 

மேலும் குழந்தை அசைவின்றி கிடக்கிறது என்று கேட்டதற்கு பால் குடித்தபோது நாசியில் பொறை ஏறி இருக்கலாம் என்று சாதரணமாக கூறி உள்ளார். உடனே கார்த்திக் குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து தனியார் மருத்துவமனைக்கு சென்ற போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது குழந்தையின் மூச்சுக் குழாயில் டிஸ்யூ பேப்பர் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து  கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் பெனிட்டா ஜெய அன்னாவை விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர் 

விசாரணையில் போது பல திடுக்கிடும் தகவல்களை கூறி போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளார் பெனிட்டா ஜெய அன்னா. அதாவது தங்களுக்கு குழந்தை பிறக்கும் வரை கணவன் தன்னை அன்பாக கவனித்து வந்ததாகவும் மாமியாரும் நன்றாக பார்த்து வந்ததாகவும் பெண் குழந்தை பிறந்து கணவரின் வீட்டிற்கு சென்ற நாளில் இருந்து மாமியார் தன்னை ராசி இல்லாதவள் என்று தொடர்ந்து திட்டி வந்ததாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெனிட்டா ஜெய அன்னா, குழந்தையும் எடுத்து கொண்டு தனது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போதும் கணவர் தன்னிடம் அன்பாக இல்லாமல் குழந்தையிடம் மட்டுமே அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாகவும், இதனால் குழந்தை மீது தனக்கு ஆத்திரம் ஏற்பட்டதாகவும் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் கார்த்திக் தனது தாயாரை பார்ப்பதற்காக திண்டுக்கல்லுக்கு சென்றுள்ளார். 

இதுதான் சரியான தருணம் என்று காத்திருந்த பெனிட்டா ஜெய அன்னா குழந்தையின் தலையை சுவற்றில் அடித்து கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் குழந்தை அதில் சாகாமல் அழுதுள்ளது . இதனையடுத்து குழந்தையை சத்தம் இல்லாமல் கொல்வது எப்படி என்று சிந்தித்த பெனிட்டா ஜெய அன்னா குழந்தையின் தொண்டை பகுதியில் சுவாச குழாயில் டிஸ்யூ பேப்பரை சுருட்டி அடைத்து வைத்துள்ளார்.

இதில் குழந்தை மூச்சடக்கி உயிரிழந்து உள்ளது. இதனையடுத்து எதுவும் நடக்காதது போல் குழந்தையை தொட்டிலில் போட்டுக்கொண்டு தனது அன்றாட வேலைகளை செய்து வந்தபோது ஊருக்கு சென்றிருந்த கணவர் திரும்ப வந்து குழந்தையை பார்த்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் குழந்தை பால் குடிக்கும் போது நாசியில் புரை ஏறி இறந்ததாகவும் தெரிவித்து நாடகமாடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து போலீசார் பெனிட்டா ஜெய அன்னாவை கைது செய்து சிறையில் அடைத்ததோடு குழந்தையின் உடலை தந்தையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விதிகளை மீறுகிறார் ராகுல்காந்தி!! இனி இப்படி பண்ணாதீங்க! CRPF புகார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share