×
 

பொங்கல் பரிசு தொகுப்பில் போங்காட்டம்... திமுக அரசை விளாசிய நயினார்...!

பொங்கல் பரிசு தொகுப்பில் திமுக அரசு போங்காட்டம் ஆடுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தலா 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1.77 கோடி வேட்டி, 1.77 கோடி சேலைகள் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் என செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பொங்கல் பரிசு தொகுப்பில் போங்காட்டம் நடப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இன்னும் 13 நாட்களில் பொங்கல் திருநாள் வரவிருக்கும் வேளையில், இப்போது தான் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு 248 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திமுக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என தெரிவித்தார். 

பொங்கலுக்கு 5,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கவேண்டும் எனப் பொதுமக்களும், தொகுப்பில் மஞ்சள் கிழங்கு, வெல்லம் வழங்கிட கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகளும் எதிர்பார்த்து வரும் வேளையில், சொற்பத் தொகையை ஒதுக்கி, அவர்களின் நம்பிக்கையை உடைத்து, வழக்கம் போல ஏமாற்றத்தைப் பரிசளித்துள்ளது திமுக அரசு என கூறினார்.

இதையும் படிங்க: பாவம் சும்மா விடாது...! புத்தாண்டில் தூய்மை பணியாளர்களை தவிக்க விட்ட ஸ்டாலின் அரசு... நயினார் கண்டனம்..!

மேலும், வருடாவருடம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நிலையில், இத்தனை நாட்கள் பரிசுத் தொகுப்புக்கான கரும்பையும் பச்சரிசியையும் சக்கரையையும் கொள்முதல் செய்யாதது ஏன் என்றும் ஒருவேளை, கடைசி நேரத்தில் கண்துடைப்புக்காக ஏனோதானோ எனக் கொள்முதல் செய்து, உழவர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றும் திட்டமா எனவும் கேள்வி எழுப்பினார். ஆட்சி முடியும் தருவாயிலாவது திமுக அரசின் போங்காட்டத்தை ஒதுக்கி வைத்து, உடனடியாகக் கரும்பையும் மஞ்சளையும் வெல்லத்தையும் கொள்முதல் செய்து, 5,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசை சரிவர வழங்குங்கள் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: திமுக மறதிக்கு கடலோர மக்கள் பதிலடி காத்திருக்கு... நயினார் விமர்சனம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share