ஏன் வைஷு இப்டி பண்ணீங்க? அருவருப்பா இருக்கு! மனம் குமுறிய நாஞ்சில் விஜயன்..!
வைஷ்ணவி தனக்கு சகோதரி போன்றவர் என நாஞ்சில் விஜயன் கூறியுள்ளார்.
சின்னத்திரை உலகில் காமெடி நிகழ்ச்சிகளால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் நாஞ்சில் விஜயன், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் திடீரென ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். விஜய் டிவியின் கலக்கபோவது யாரு, கூக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் தனது மிமிக்ரி மற்றும் நகைச்சுவை திறமைகளால் பிரபலமான இவர், கடந்த சில நாட்களாக திருநங்கை வி.ஜே. வைஷ்ணவி என்பவரின் கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளால் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் விவாதத்தின் மையத்தில் இருக்கிறார். இந்த சம்பவம், தனிப்பட்ட உறவுகளின் சிக்கல்களையும், சமூக கருத்துக்களையும் வெளிப்படுத்தும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வைஷ்ணவியின் குற்றச்சாட்டுகள் 2011-ஆம் ஆண்டு முதல் தொடங்குகின்றன.
அப்போது இருவரும் நண்பர்களாக பழகத் தொடங்கியதாக வைஷ்ணவி கூறினார். கடந்த ஏழு வருடங்களாக நாஞ்சில் விஜயன் தன்னுடன் நெருக்கமான உறவில் இருந்ததாகவும், அது பாலியல் ரீதியாகவும் விரிவடைந்ததாகவும் வைஷ்ணவி வெளிப்படையாகப் பேசியுள்ளார். அவர் என்னுடன் திருமணம் செய்வதாக நம்ப வைத்து, ஆசை வார்த்தைகளால் ஏமாற்றினார்., என்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இரவு முழுவதும் தன்னை டார்ச்சர் செய்ததாகவும், தூங்க வைக்கவில்லை என்றும் அவர் விவரித்துள்ளார். இந்த உறவு, வைஷ்ணவியின் கஷ்டமான காலத்தில் ஆறுதலாக இருந்ததாகவும், அதன் பிறகு காதலாக மாறியதாகவும் அவர் விளக்குகிறார். ஆனால், இந்த உறவின் திருப்பம் 2023-ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
அப்போது நாஞ்சில் விஜயன் மரியா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு முன் ஐந்து ஆண்டுகள் வரை தன்னை திருமணம் செய்வதாக உறுதியளித்து, பின்னர் திருநங்கை என்பதால் சமூகத்தில் தன் இமேஜ் கெட்டுப்போகும் என்று கூறி பிரிந்ததாக வைஷ்ணவி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆறு மாதங்களாக அவர் தனது தொடர்பு எண்ணை பிளாக் செய்து, பேச்சைத் தவிர்த்ததாகவும், தன்னை மனதளவில் புண்படுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக காவல்துறையில் அவர் புகார் அளித்து உள்ளார்.
இதையும் படிங்க: எங்களை தடுக்காதீங்க! விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு...
இந்த நிலையில் நாஞ்சில் விஜயனும் அவரது மனைவி மரியாவும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் பேசிய நாஞ்சில் விஜயன், வைஷ்ணவி தனக்கு சகோதரி போன்றவர் என்றும் அவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறுவது பொய் குற்றச்சாட்டு என்றும் தெரிவித்துள்ளார். என் வைஷு இப்படி பண்றீங்க? கேட்கவே அருவருப்பா இருக்கு… எங்களால வெளியில தலை காட்ட முடியல என்று பேசி உள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள வைஷ்ணவி மீது தனக்கு தற்போது மரியாதை இருப்பதாகவும், காவல்துறையினர் தன்னை அழைத்து பேசுவார்கள் அப்போது நடந்துவற்றை கூறுவேன் என்றும்., தன்னுடைய அலைபேசி ஹிஸ்டரி எடுத்து பார்க்கட்டும் அப்போது உண்மை தெரியவரும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ஏர்போர்ட் மூர்த்தி மீது கொலை வெறித்தாக்குதல்! போலீஸ் இதை விரும்புதா? சீமான் ஆவேசம்