தனியாக வசிக்கும் பெண்களே குறி... வீடு புகுந்து ஆபாச படமெடுத்து ரசித்த ‘சைக்கோ’... சிக்கியது எப்படி?
நெல்லையில் பெண்களை வீடு புகுந்து ஆபாசமாக படம் எடுத்து ரசிக்கும் சைக்கோ வாலிபர் சிக்கியது எப்படி?
நெல்லை பேட்டை ரகுமான் பேட்டை பகுதியைச் சார்ந்தவர் 28 வயது பெண். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 2 குழந்தைகளுடன் இந்த பெண் தனியாக தனது வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவில் இந்த பெண் தனது குழந்தைகளோடு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென வாலிபர் ஒருவர் உள்ளே புகுந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் சத்தமிடவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அங்கிருந்த வாலிபரை மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர்.
காயமடைந்த வாலிபர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் வருவதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் தப்பிச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளியில் தலைதூக்கும் சாதிய மோதல்... சாதி பெயரை சொல்லி திட்டி +2 மாணவனை கட்டையால் தாக்கிய சக மாணவர்...!
இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பெண்ணை ஆபாசமாக படம் எடுக்க முயற்சி செய்தது ரஹ்மான் பேட்டை பகுதியைச் சார்ந்த தாக்கரை பீர்முகமது வயது 23, என்ற வாலிபர் என்பது தெரியவந்தது.
மேலும் இந்த வாலிபர் இதுபோன்று தனிமையில் இருக்கும் பெண்களின் வீடுகளை குறிவைத்து இரவு நேரங்களில் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்து பெண்கள் குளிக்கும் போது ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்து அதை ரசிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
பீர்முகமது இந்த சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தப்பி சென்றது. அவரது அலைபேசி மூலமாக காவல்துறையினர் கண்டறிந்தனர். தனிப்படைக்காவல்துறையினர் நெல்லையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சென்று அங்கே பதுங்கி இருந்த பீர் முகமதுவை கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை பேட்டை பகுதியில் வாலிபர் ஒருவர் தனிமையில் இருக்கும் பெண்களை வீடு புகுந்து ஆபாசமாக படம் எடுத்து ரசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "மிசா, எமர்ஜென்சியை பார்த்த கட்சி தி.மு.க"..! தவெக சரிவை சந்திப்பது உறுதி..! உதயநிதி திட்டவட்டம்..!