×
 

விடிய விடிய டார்ச்சர்...!! - நெல்லையில் வீட்டிற்கு கூட விடாமல் பெண் பி.எல்.ஓ.,க்களுக்கு நடந்த கொடுமை...!

நெல்லையில் நள்ளிரவிலும் வீட்டிற்கு விடாமல் பி.எல்.ஓ.,க்களை எஸ் ஐ ஆர் பணிகளை பார்க்க வைத்த அதிகாரிகளால் பெண் பி.எல்.ஓ.க்கள் அவதி 

தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் எஸ் ஐ ஆர் என்று சொல்லக்கூடிய சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் பணியானது கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் தீவிரமாக இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாக்காளர்களின் விவரங்களை கண்டறிய முடியாதது, படிவங்களை பூர்த்தி செய்யாத வாக்காளர்கள், மழை பாதிப்பு என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் எஸ் ஐ ஆர் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் எஸ் ஐ ஆர் பணி செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் 1,644 பிஎல்ஓக்கள் எஸ் ஐ ஆர் பணியில் 5 தொகுதிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் 98 சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.  அந்த வகையில் இறந்த வாக்காளர்கள், இடம்பெயர்ந்தவர்கள், காணாமல் போனவர்கள் என 2.33 லட்சம் பேர் தாங்கள் வாக்கு செலுத்தும் தகுதியை இழக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. 

இந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் அதிகாரிகள் தமிழகத்தில் நடந்துள்ள எஸ் ஐ ஆர் பணிகளை பார்வையிடுவதற்காக வர உள்ளனர். அவர்களிடம் நற்பெயர் வாங்குவதற்காக நெல்லை மாவட்டம் நிர்வாகம் நெல்லை தச்சநல்லூர் மாநகராட்சி மண்டல அலுவலகம் உள்ளிட்ட 4 மண்டல அலுவலகங்களிலும் அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பி.எல்.ஓ.க்களை அந்தந்த மண்டல அலுவலகங்களில் அமர வைத்து எஸ்.ஐ.ஆர் பணிகளை கட்டாயமாக முடித்துவிட்டு தான் செல்ல வேண்டுமென கட்டாயப்படுத்தி நள்ளிரவு 12  மணிக்கும் மேல் பணியாற்ற அறிவுறுத்தியுள்ளனர். 

இதையும் படிங்க: அவரு கையால வாங்க மாட்டேன்! ஆளுநர் ரவியை புறக்கணித்த மாணவி… பட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு…!

அதன்படி 100க்கும் மேலான பெண்கள் உட்பட பி.எல்.ஓக்கள் வீட்டிற்கு செல்ல முடியாமல் வேதனையில் பணியாற்றியுள்ளனர். ஒரு சில பிஎல்ஓக்கள்  வெளியூரிலிருந்து இங்கு வந்து பணியாற்றி வருவதால் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமலும், குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடிப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர். எப்பொழுது முடியும் என்று தெரியாது, முடிந்தவுடன் வீட்டிற்கு அனுப்பி விடுவோம் என அதிகாரிகள் தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடும் தாமிரபரணி தண்ணீர்... மூழ்கும் நிலையில் முருகன் கோவில்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share