×
 

உடலில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை.. 21 பள்ளி மாணவிகளை சீரழித்த அறிவியல் ஆசிரியர்..!

நீலகிரியில் அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது.

வேலியே பயிரை மேய்ந்தது போல் பள்ளி மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் தொல்லைக்குள்ளாக்கும் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னிடம் படித்த 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பகீர் கிளப்பியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). இவர் 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் பணியாற்றி உள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உதகை அருகே உள்ள காத்தாடிமட்டம் அரசு பள்ளிக்கு பணி மாறுதலில் வந்த நிலையில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அறிவியல் பாடம் எடுத்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த அரசு பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் சென்றனர். அப்போது பள்ளியில்  ஆறாம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், உடலில் தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசாரிடம் புகார் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: “காலில் விழுந்து கதறியும் விடல”... அறைக்குள் அடைத்து 3 மணி நேரம் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை...!

இதேபோல் 20 -க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் உதகை ஊரக காவல் ஆய்வாளர் விஜயா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோத்தகிரியைச் சேர்ந்த செந்தில்குமார், கடந்த 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த ஜூன் மாதம் தான் இந்த அரசு பள்ளிக்கு மாறுதலாகி வந்திருக்கிறார். 6 முதல் 8 -ம் வகுப்பு வரை அறிவியல் பாடம் நடத்தி வந்த இவர், மாணவிகளிடம்‌ தவறான தொடுதலில் ஈடுபட்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவிகளை முத்தமிடுதல், தவறான தொடுதல் என 21 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடிக்குள் பயங்கரம்... உருட்டுக்கட்டையைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share