×
 

பச்சை பொய் பேசிய பாக்.,! மூக்கறுத்த அமெரிக்கா! கைமாறும் பவர்புல் மிசைல்? India vs US!!

இந்தியாவுடனான போரில் தோற்றுப்போன பாகிஸ்தான், அமெரிக்காவுடன் பெரிய அளவில் நெருக்கம் காட்டி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள வளங்களை எடுப்பதற்காகவும், தங்கள் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் பாகிஸ்தானிடம் நெருங்கி பழகுகிறார் அதிபர் டிரம்ப்.

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான பதற்றத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி, ‘அம்ராம்’ (AMRAAM) என்ற சக்திவாய்ந்த ஏவுகணைகளைப் பெறுவதாக பாகிஸ்தான் பரப்பிய தகவல் பொய்யென அமெரிக்க வெளியுறவுத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது, இந்தியாவுக்கு எதிராக ராணுவத்தை வலுப்படுத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியில் பின்னடைவாக அமைந்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு, அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, பாகிஸ்தானுக்கு ‘அம்ராம்’ ஏவுகணைகளை வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததாக பாகிஸ்தான் தரப்பு பரவலாக பரப்புரை செய்தது. 

இந்த ஏவுகணைகள், 160 கிலோமீட்டர் தூர இலக்கைத் துல்லியமாகத் தாக்கக் கூடியவை, மணிக்கு 4,800 கிலோமீட்டர் வேகத்தில் சென்று இலக்கை அழிக்கவல்லவை, மற்றும் நவீன ரேடார் அமைப்புடன் திசைமாறி தாக்கும் திறன் கொண்டவை. இவை பாகிஸ்தான் கைவசம் சென்றால், இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று கருதப்பட்டது.

இதையும் படிங்க: இந்தியாவுடன் மோதல்! பாகிஸ்தானுடன் நெருக்கம்! வெள்ளை மாளிகையில் நடந்த பரபரப்பு சந்திப்பு!

இந்தியாவை மிரட்டும் வகையில், பாகிஸ்தான் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தைப் பற்றி பேசி வந்தது. ஆனால், அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தக் கூற்றை மறுத்து, செப்டம்பர் 30-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் புதிய ஏவுகணைகளை வழங்குவதற்கானது இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. 

“இது ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் திருத்தம் மட்டுமே. பாகிஸ்தான் வசம் உள்ள ஏவுகணை அமைப்புகளுக்கு பராமரிப்பு மற்றும் உதிரி பாகங்கள் வழங்குவதற்கு மட்டுமே இந்த ஒப்பந்தம் உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் திறனை மேம்படுத்த புதிய கருவிகள் எதுவும் வழங்கப்படவில்லை,” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்தது.

இந்த மறுப்பு, பாகிஸ்தானின் பரப்புரையைப் பொய்யாக்கியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக ராணுவ வலிமையைப் பயன்படுத்த அமெரிக்க ஆதரவைப் பெறுவதற்கு பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததாகக் கருதப்படுகிறது. இந்தச் சம்பவம், பாகிஸ்தான்-அமெரிக்கா உறவுகளில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது, மேலும் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் அரசியல் மற்றும் ராணுவ உத்திகளுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
 

இதையும் படிங்க: விரைவில் ட்ரம்புடன் மீட்டிங்! பரபரக்கும் பாக். பிரதமர், ராணுவ தளபதி! இந்தியாவுக்கு சிக்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share