×
 

பெட்ரோல் பங்கை சுறையாடிய போதை ஆசாமிகள்! எரிபொருள் நிரப்பும் இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!

சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் 10 பேருடன் வந்த அந்த கஞ்சா மது போதை ஆசாமிகள் பெட்ரோல் பங்க் உள்ளே நுழைந்து ஊழியர்களை கட்டை மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொண்டு சரமாறியாக தாக்கி உள்ளனர்.

தூத்துக்குடியில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை ஆயுதங்களுடன் வந்த கும்பல் தாக்கி, அலுவலகம் மற்றும் பெட்ரோல் பங்க் சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி ராமேஸ்வரம் சாலையின் கீழ் அரசடி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பெட்ரோல் பங்கில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று மாலை சுமார் 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட குழு எரிபொருள் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்கிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த குழுவில் இருந்த ஒருவர், பெட்ரோல் பங்கில் கழிப்பறை வசதி இருந்தபோதிலும், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படும் பகுதி அருகே சிறுநீர் கழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதைக் கவனித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், அங்கு அவ்வாறு செய்யக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன்!! முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சபதம்!

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நபர்கள், ஊழியர்களை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சம்பவம் அத்துடன் முடிவடையவில்லை.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, கூடுதலாக சிலரை அழைத்துக்கொண்டு சுமார் 10 பேர் கொண்ட கும்பல் மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளது. பின்னர் அவர்கள் பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்து, அங்கு பணியில் இருந்த ஊழியர்களை கட்டைகள், கத்திகள் மற்றும் அரிவாள்கள் போன்ற ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் மற்றும் கட்டமைப்புகளையும் சேதப்படுத்திய அந்த கும்பல், சம்பவத்திற்குப் பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. தாக்குதலில் சில ஊழியர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர் சவுரவ், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடத்தில் நடந்த இந்த வன்முறை சம்பவம் தூத்துக்குடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: 8ம் ஆண்டு நினைவு தினம்..!! கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share