இந்தா ஆரம்பிச்சிட்டாங்க இல்ல... விஜய் தலையில் இறங்கியது இடி... போலீஸ் கொடுத்த ஷாக்
திருச்சி தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
திருச்சியில் இருந்து சுற்றி பயணத்தை தொடங்கிய தவெக தலைவர் விஜய்க்கு காவல் துறை சார்பில் 23 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனை தனது தொண்டர்களுக்கு தெளிவுப்படுத்தும் விதமாக சுற்றுப்பயணத்தை தொடங்கும் முன்பே சில அறிவுறுத்தல்களை தவெக தலைமை வழங்கியிருந்தது. ஆனால் அதை எல்லாம் காற்றில் பறக்கவிட்ட விஜய் தொண்டர்களும், ரசிகர்களும் வழக்கம் போல் தங்களது அட்ராசிட்டியை அரங்கேற்றினர். முதலில் திருச்சி விமான நிலையத்திற்கு விஜய் வந்தடைந்ததும் தடுப்பு வேலிகளை தாண்டி குதித்து அப்பகுதியையே கலவர பூமியாக மாற்றினர். அடுத்ததாக காவல்துறை அறிவுறுத்தலையும் மீறி விஜய் பிரச்சார வாகனத்தை நூற்றுக்கணக்கான பைக்குகளில் தொண்டர்கள் பின் தொடர்ந்து சென்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி டோல்கேட் பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
விஜய் பிரச்சார வாகனம் பயணித்த வழி நெடுகிலும் கொடி கம்பங்கள், பேனர் கம்பங்கள், வாகனங்கள், வீடுகளின் மேற்கூரைகள், சுவர்கள், மரங்கள் என பார்க்கும் இடங்கள் மேல் எல்லாம் ஏறி நின்றனர். இவர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் மிகுந்த சிரமங்களை சந்தித்த நிலையில், மின்சாரம் தாக்கி ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்கா மரக்கடை பகுதியில் மின்சாரத்தை தூண்டிக்கும் நிலை உருவானது.
திருச்சி மரக்கடை பகுதியில் ஒன்றல்ல, இரண்டல்ல 7 மணி நேரத்திற்கு மேலாக விஜய்யைக் காண தொண்டர்கள் கூடியிருந்தனர். இப்படி நீண்ட நேரம் காத்திருந்ததால், கடும் வெயிலின் காரணமாகத் தண்ணீரின்றித் தவித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், ஒரு பாட்டில் தண்ணீருக்காகப் பலரும் முண்டியடிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. மேலும் வெயின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் மயக்கமடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் சக தொண்டர்களே தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்து இயல்பு நிலைக்குத் திரும்ப உதவினர்.
இதையும் படிங்க: செக் வைத்த போலீஸ்... உடைத்தெறிந்த விஜய்... திருச்சியை அதிர விட்ட தரமான சம்பவங்கள்...!
இந்நிலையில், திருச்சியில் நடந்த த.வெ.க பிரச்சாரத்தின் போது தனியார் மற்றும் பொது சொத்துகளை சேதம் விளைவித்தது, போலீசார் விதித்த நிபந்தனைகளை மீறியது உள்ளிட்டவை தொடர்பாக த.வெ.க நிர்வாகிகள் கரிகாலன், ஆதித்ய சோழன், இமய தமிழன், துளசி மணி உள்ளிட்டோர் மீது கண்ட்டோண்மென்ட் காவல் நிலையம், காந்தி மார்க்கெட் காவல் நிலையம், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திரும்பிய திசையெல்லாம் போக்குவரத்து நெரிசல்... திடீர் கடையடைப்பு... விஜய் வருகையால் திணறும் திருச்சி....!