×
 

பொங்கலுக்கு வேட்டி, சேலை உண்டா? ரொக்கம் எவ்வளவு? புதுச்சேரி அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அக்டோபர், நவம்பர் மாதத்துக்கான தலா 2 கிலோ வீதம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட்டது. ஜனவரி 3-ந்தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும்.

புதுச்சேரி அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச சேலை-வேட்டி (இலவச ஆடை) திட்டம் இனி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மேலதிகமாக, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதந்தோறும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் என்று முதலமைச்சர் என். ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இந்த திட்டத்தை திலாசுப்பேட்டை ரேஷன் கடையில் நேரில் தொடங்கி வைத்த முதலமைச்சர் ரங்கசாமி, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான தலா 2 கிலோ வீதம் மொத்தம் 4 கிலோ இலவச கோதுமையை பொதுமக்களுக்கு வழங்கினார். இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கும் திட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று அவர் உறுதி அளித்தார்.

இதையும் படிங்க: வெளியானது பொங்கல் பரிசு தொகுப்பு விவரம்!! ஜன.,3 முதல் உங்கள் கைகளில்! லிஸ்ட் இதோ?!

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் அரசு ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், ஜனவரி 3ஆம் தேதி முதல் ரூ.750 மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இலவச ஆடைக்கு பதிலாக பணம் வழங்கும் முடிவு ரேஷன் கார்டுதாரர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பணத்தை தங்களுக்கு தேவையான ஆடைகள் அல்லது பிற பொருட்களுக்கு செலவிடலாம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இலவச கோதுமை மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கல் போன்ற நலத்திட்டங்கள் ஏழை மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்புகள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவும் என்று அரசியல் வட்டாரங்களில் பாராட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ரூ.3,000மா? ரூ.5,000மா? பொங்கல் பரிசு ரொக்கம் எவ்வளவு? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share