NDA-விலிருந்து கழன்ற முக்கிய கட்சி... இரவோடு இரவாக இபிஎஸுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்... கூட்டணி கட்சி எடுத்த திடீர் முடிவு...!
2026 சட்டமன்ற தேர்தலில் இந்த நிமிடம் வரை தனித்து போட்டியிட ஆயத்தமாகி கொண்டு இருக்கின்றோம் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
தேவேந்திர குல மக்களை அதிமுக அவமரியாதை செய்து விட்டது எனவும் எல்லா வித சூழல்களுக்கும் தயாராகி விட்டோம் எனவும், 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த நிமிடம் வரை தனித்து போட்டியிட ஆயத்தமாகி கொண்டு இருக்கின்றோம் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்கு புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட கூடிய விருப்ப மனு பெறப்படுகின்றது எனவும், 21 மாவட்டங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டவர்களிடம் நேர் காணல் நடைபெற்றுள்ளது எனவும் தெரிவத்தார். கடந்த இரு நாட்களாக நடத்த நேர்காணலில் 60 பொது தொகுதி மற்றும் ரிசர்வ் தொகுதி அடையாளம் காணப்பட்டு வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனவும் அடுத்து 10 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த காலங்களை விட நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலத்து கொண்டு இருக்கின்றனர் என தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சி நல்லாட்சி அமைய, ஆட்சியிலும்,அதிகாரத்தில் பங்கோடு கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று அனைத்து விதமான செயல்பாடுகளில் ஈடுவது என கட்சியின் 7 வது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என தெரிவித்த அவர்,2019 நாடாளுமன்ற தேர்தல்,2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தே.ஜ.கூ அங்கம் பெற்று இருந்த நிலையில், கூட்டணி குறித்து அதிமுகவுடன் பல சுற்று பேச்சு நடத்தினோம் என தெரிவித்தார். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நேரில் பேசினோம், அதனை தொடர்ந்து அதிமுக குழுவினருடன் சந்தித்தோம் என தெரிவித்த அவர், தென் தமிழகத்தில் தேவேந்திர குலத்தில் இருந்து யாரும் ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்யப்படாத நிலையில், புதிய தமிழகத்திற்கு ஒரு ராஜ்யசபா கொடுக்க வேண்டும்,12 முதல் 15 தொகுதி வரை கொடுத்தால் மட்டுமே தனி சின்னத்தில் போட்டியிட முடியும் என கேட்டோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் தாமரை வேண்டாம்..! போஸ்டர் ஒட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுகவினர்..!!
பல பேச்சுவார்த்தைக்கு பின்பு 7 இடங்களை மட்டும் எழுதி கொடுங்கள் என கேட்டார்கள் என தெரிவித்த அவர், சங்கரன்கோவில், வாசு தேவ நல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் இதில் ஏதாவது ஒரு இடத்தை அதிமுகவிடம் கேட்டோம் எனவும் தெரிவித்தார். ஆனால் அதன் பின்பு கோவையில் சந்தித்த அதிமுக நிர்வாகிகள் 5 சீட் மட்டும் என எழுதி வாங்கி சென்றனர் எனவும், அதன் பின்பு திருவிடை மருதூர் தொகுதியை கொடுத்தனர். அங்கு புதிய தமிழகம் வலுவில்லாத பகுதி எனவும் தெரிவித்த அவர், அதன் பின்பு அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை எனவும் , திடீரென எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நின்று விட்டது என சொல்லி விட்டார் என தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் கலைஞர், ஜெயலலிதா ஆகியோரிடம் இருப்பது போன்ற அணுகு முறை இல்லை என தெரிவித்த அவர், புதிய தமிழகம் பல்வேறு போராட்டங்களை தனியாக எடுத்து இருக்கின்றொம் எனவும், மாஞ்சோலை தொழிலாளர்கள் பிரச்சினையில் இப்போது வரை புதிய தமிழகம் போராடி வருகின்றது எனவும் கூறி நடத்திய போராட்டங்களை பட்டியலிட்டார்.
2019,2024 தே.ஜ.கூட்டணியில் இருந்த நிலையில், அதன் நீட்சியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதிமுக அணியில் இடம் பெற பெறும் முயற்சி எடுத்தோம் எனவும், ஆனால் பேச்சுவார்த்தை நின்று விட்டது என அவர்கள் சொல்லி விட்டனர் என தெரிவித்த அவர்,தேவேந்திர குல மக்களை அதிமுக அவமரியாதை செய்து விட்டது எனவும் தெரிவித்த அவர், எல்லா வித சூழல்களுக்கும் நாங்கள் தயாராகி விட்டோம் என தெரிவித்தார். தனித்து போட்டியிடும் சூழல் உருவாகி விட்டது என தெரிவித்த அவர், நாங்கள் 120 தொகுதியில் வலுவாக இருக்கின்றாம் எனவும் தெரிவித்தார்.
நாங்கள் கேட்பதை கொடுத்தால் பேச்சுவார்த்தைக்கு போவோம் என தெரிவித்த அவர், தே.ஜ.கூட்டணி பேனரில் இருந்து என் புகைபடத்தை ஏன் எடுத்தார்கள் என்பது தெரியவில்லை எனவும் தெரிவித்தார். புதிய தமிழகத்திற்கு ராஜ்யசபா உறுப்பினர் என்ற கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்க வில்லை என தெரிவித்த அவர், நாங்கள் வெளியில் இருந்து உள்ளே போகவில்லை தே.ஜ.கூட்டணியில் இருந்தோம் எனவும் தெரிவித்தார்.
சட்டமன்ற தனித்து போட்டியிட முழுமையாக ஆயத்தம் ஆகிவிட்டோம் என தெரிவித்த அவர், தொகுதிகளை தேர்வு செய்து தயாராகிவிட்டோமே தவிர , நாளை என்ன நடக்கும் என தெரியாது எனவும் தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சியை புறக்கணிக்க காரணம் என்ன என அதிமுகவிடம் கேளுங்கள் என்றார். திமுக கூட்டணியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இரண்டு அல்லது மூன்று கட்டமாக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி... இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு... ஷாக்கில் இபிஎஸ்...!