ஒரே இரவில் 3 பேர் அடித்துக் கொலை.. ராணிப்பேட்டையில் பயங்கரம்..!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நள்ளிரவில் மூன்று பேரை கொலை செய்து தப்பி ஓடிய நபரை கைது செய்த காவல்துறை
சோளிங்கர் அடுத்த கொடைக்கானல் அருகே உள்ள புது குடியயானூர் பகுதியை சேர்ந்த பாலு(30) என்பவருக்கும் வாலாஜாபேட்டை அடுத்த கீழ் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி(26) என்பவர்களுக்கு திருமணம் நடைபெற்று நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புவனேஸ்வரி தனது கணவனை பிரிந்து கடந்து இரண்டு ஆண்டுகளாக கீழ் புதுப்பேட்டை பகுதியில் உள்ள தனது தாயான பாரதி(45) என்பவர் வீட்டில் புவனேஸ்வரி வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது கணவனான வாழும் பல மாதங்களாக பேச்சுவார்த்தை மற்றும் பழக்க வழக்கம் இல்லாத நிலையில் புவனேஸ்வரி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலு நேற்று இரவு தனது மனைவியின் தாயார் வீடான புது கீழ் புதுப்பேட்டை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு புவனேஸ்வரி இல்லாததால் அவரது தாயாரான பாரதியை சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதையும் படிங்க: விண்ணில் பாய்கிறது PSLV C61... மீனவர்களுக்கு கட்டுப்பாடு விதித்த மீன்வளத்துறை!
மேலும் தனது மனைவி புவனேஸ்வரி எட்டு மாதம் கர்ப்பமாக இருப்பதற்கு தனது சித்தப்பா மகன் விஜயன் என்பவர் காரணம் என்று கொடைக்கானல் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விஜய் இல்லாததால் விஜய்யின் தந்தையான அண்ணாமலை(60) மற்றும் ராஜேஸ்வரி (55)ஆகிய இருவரையும் இரும்புராடு மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார்.
கணவன் மனைவி பிரச்சனையால் மாமியார், சித்தப்பா சித்தி என மூன்று நபர்களை ஒரே இரவில் கொலை செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது பாலு காவல்துறையினர் பிடித்து வைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: பலூசிஸ்தானில் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அதிகரிக்கும் ஆதரவு.. சோஷியல் மீடியாவில் பலூச் படையினர் வெறித்தனம்!