நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்... திமுகவுடன் கூட்டு சேர்ந்த விசிக... சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது என்ன?
இதனைத் தொடர்ந்து மாநகர மேயர் தலைமையில் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக மாநகர மேயர் ராமச்சந்திரன் அறிவித்தார்.
நள்ளிரவில் நேரில் வந்த மாநகராட்சி ஆணையர் , கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்ததால் , மாநகர மேயர் தலைமையில் சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
நான்கு மாவட்ட குப்பைகளை எரிசக்தி தயாரிக்கும் திட்டத்தை ரத்து செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசுக்கு அனுப்புவதாக மாநகராட்சி ஆணையாளர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாக மாநகர மேயர் அறிவிப்பு
குடிநீர் விநியோக ஒப்பந்தத்தை தனியாருக்கு தாரை வார்த்த திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசுக்கு அனுப்புவதாக மாநகராட்சி ஆணையாளர் ஒப்புக்கொண்டதாக மாநகர மேயர் தகவல்
இதையும் படிங்க: அதிர வைக்கும் போக்சோ வழக்கு..! ஜெம் குழுமத்தை குறிவைத்து ரெய்டு..! சேலத்தில் அதிரடி சோதனை..!
சேலம் மாநகர மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்த கரூர்,ஈரோடு உள்ளிட்ட நான்கு மாவட்ட குப்பைகளை சேலத்தில் கொண்டு வந்து கொட்டி அதிலிருந்து எரி சக்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அறிவித்தார். அதேபோல் சேலம் மாநகரின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் என்ற தனியார் திறுவனத்திற்கு தாரை வார்க்கும் திட்டம் இந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
இந்த இரண்டு திட்டங்களும் சேலம் மாநகர மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த திட்டங்களை ரத்து செய்திட வலியுறுத்தி கடந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை அரசுக்கு அனுப்பாமலும் மாமன்ற கூட்டத்தை நடத்திட அனுமதி அளிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்ய நீலம் ஐஏஎஸ் அவர்களை கண்டித்தும் , கடந்த மாமன்ற கூட்டத்தின் போது , காங்கிரசைச் சேர்ந்த துணைமேயர் சாரதாதேவி , மாமன்ற கூட்டத்தை நடத்த விடாமல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளையும் , அடியாட்களையும் வைத்து அராஜக போராட்டத்தில் ஈடுபட்டார். எனவே துணை மேயர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் தலைமையில் திமுக , விசிக மாமன்ற உறுப்பினர்கள் சுமார் 25 பேர் இன்று காலை 10 மணி முதல் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள , மாநகர மேயர் அலுவலகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கினர்.
தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி இரவு 10 மணி வரை போராட்டம் நீடித்தது. மேலும் நள்ளிரவில் அந்த அறையிலேயே படுக்கை, தலையணை கொண்டு வந்து மாநகர மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அனைவரும் அறையிலேயே படுத்து , இரவிலும் போராட்டம் தொடரும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
போராட்டத்தின் தீவிரத்தை அறிந்த மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்ய நீலம் , நள்ளிரவு சுமார் பத்து முப்பது மணி அளவில் காவல்துறை அதிகாரிகளுடன் மேயர் அலுவலகறைக்கு வந்தார் , அப்போது அனைவரும் அங்கேயே படுத்து போராட்டத்தை தொடர்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் . பின்னர் மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் . சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் , மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து மாநகர மேயர் தலைமையில் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக மாநகர மேயர் ராமச்சந்திரன் அறிவித்தார். மக்களை பாதிக்கும் திட்டங்களை ரத்து செய்திட வலியுறுத்தி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அரசுக்கு அனுப்பி வைப்பதாக மாநகர ஆணையாளர் உறுதி அளித்து இருப்பதாகவும் , அதே போன்று மாமன்ற கூட்ட அரங்கில் அத்துமீறி நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.
இதன் காரணமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் போராட்டம் குறித்தும் நடவடிக்கை குறித்தும் மாநகராட்சி ஆணையாளரிடம் கேட்ட பொழுது உரிய பதில் அளிக்காமல் அரசுக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படும் என்று கூறி அங்கு இருந்து சென்றார்.
இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 11 மணி வரை என 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.