×
 
☰

பகீர் வீடியோ..!! - பதுங்கி பதுங்கி வந்தது இதுக்குத்தானா?... இருட்டில் 70 வயது மூதாட்டியிடம் கொடூரன் செய்த காரியம்...!

ஹெல்மெட் அணிந்த நபர் மூதாட்டியிடம் நகை பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் குடியிருப்பு நிறைந்த இடத்தில் இரவு 9 மணி அளவில்  நடந்து வந்த மூதாட்டியிடம் ,  ஹெல்மெட் அணிந்து மகத்தை மறைத்து வந்த இளைஞர் ஒருவர்  3 சவரன் நகையை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள அர்த்தநாரி தெருவில் நேற்று இரவு சுமார் ஒன்பது மணி அளவில் அந்த பகுதியைச் சேர்ந்த அம்சவல்லி என்ற எழுபது வயது மூதாட்டி நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவரை நோட்டமிட்ட இளைஞர்  ஒருவர், ஹெல்மெட் அணிந்து கொண்டு முகத்தை மறைத்தப்படி  வந்து , மூதாட்டியை வழி மறித்து அவருடைய  கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.

இதில் மூதாட்டி கீழே விழுந்து விட்டார். மூதாட்டியும் கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனாலும் ஹெல்மெட் அணிந்த திருடன் ஓடி  தப்பிவிட்டான். இது குறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூதாட்டியின் கழுத்தில் இருந்து இளைஞர் செயினை பறிக்கும்  சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

இதையும் படிங்க: #BREAKING பட்டப்பகலில் பயங்கரம்... சேலத்தில் பிரபல ரவுடி ஓட, ஓட வெட்டிக்கொலை... நடந்தது என்ன?

ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் மூதாட்டியின் நகையை பறிக்கும் பொழுது அவர் கீழே விழுந்து காயமுற்றார்.  மூதாட்டியின் அலறல் சத்தத்தை கேட்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சமாதானம் செய்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் துணிச்சலாக மூதாட்டியிடம் நகையை பறித்து கொண்டு தப்பித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

 சேலம் மாநகரில் இதுபோன்று தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் கடந்த காலங்களில் இருப்பது போன்று காவல்துறையினர் முறையான ரோந்து பணியில் ஈடுபடாததே இது போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share