×
 

தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம்… ஐகோர்ட்டில் அவசர முறையீடு!

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள், நகரின் தூய்மையைப் பராமரிக்கும் முக்கியப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் தினந்தோறும் குப்பைகளை அகற்றுதல், தெருக்களைச் சுத்தம் செய்தல், பாதாள சாக்கடைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றனர். இருப்பினும், இவர்களின் பணி நிலைமைகள், ஊதியம், மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவை நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது, நிரந்தரப் பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஸ்டாலின் தான் ஆட்சி செய்றாரு! அரசு தரப்பு விளக்கத்தை கேட்டு ஷாக் ஆன நீதிபதி...

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஆறு கட்டங்களாக இதுவரை பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 

இந்த நிலையில், 11வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி வழக்கறிஞர் வினோஜ் என்பவர் முறையீடு செய்துள்ளார்.

மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரவு தெரிவித்துள்ளது. அப்போது சேப்பாக்கம் மற்றும் எழும்பூர் ராஜரத்தின மைதானம் ஆகி போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: ராமதாஸ் நீதிமன்றத்துக்கு வர மாட்டாராம்! நீதிபதிக்கே கடிதம் எழுதிய விவகாரம்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share