தூய்மை பணியாளர்களுக்கு தரமில்லா உணவு..! இது தான் தாயுள்ளமா? அதிமுக கண்டனம்..!
தூய்மை பணியாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாக கூறி அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு, நிரந்தர பணி மற்றும் தூய்மை பணியினை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராடி வந்தனர். அவர்கள் அங்கிருந்து நீதிமன்ற உத்தரவுபடி அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு அறிவிப்புகள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது. அதில் முக்கியமானது தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேலையும் உணவு வழங்கும் திட்டம்.
அதன்படி தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மூன்று வேலையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த உணவு தரமாக இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் சம்பளத்தை கேட்டால் இவர்கள் உணவு கொடுப்பதாகவும் உணவுக்கு நாங்கள் அடிமையாய் எனவும் தூய்மை பணியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
தரம் இல்லாத உணவால் வாந்தி, வயிற்றுப்போக்கு என உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் இதுகுறித்து கூறினாலும் எங்கள் கடமைக்கு நாங்கள் உணவு கொடுப்போம் நீங்கள் சாப்பிடுவதும் தூரப்போடுவதும் உங்கள் விருப்பம் என்று அலட்சியமாக பேசுவதாகவும் கூறி உள்ளனர். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிமுக கடுமையாக கண்டித்துள்ளது.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுடன் ஒரு பொங்கல்.. சுட சுட பிரியாணி பரிமாறி உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்..!!
பெயருக்கு திட்டத்தை அறிவித்து விட்டு அந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்த விடியா திமுக அரசு பார்ப்பதே இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. கடமைக்கு திட்டத்தை அறிவிப்பது அதனை பக்கம் பக்கமாக விளம்பரம் செய்வது இதுதான் திமுக மாடல் என்றும் விளம்பரத்திற்காக திட்டங்களை அறிவிப்பது தான் இதுபோன்ற அவலநிலைக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது. தூய்மை பணியாளர்கள் கேட்டது என்ன., நீங்கள் கொடுப்பது என்ன என்று கேட்டுள்ள அதிமுக, தூய்மை பணியாளர்களை தாயுள்ளத்துடன் நடத்துவது என்பது இதுதானா ஸ்டாலின் சார் என கேட்டுள்ளது.
இதையும் படிங்க: நாங்க பாவமில்லையா? மயானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள்...!