×
 

சூடு பிடிக்கும் அரசியல் களம்... SDPI கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டி...! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

எஸ்டிபிஐ கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மும்முரமாக நடத்தி வருகிறது. அதிமுகவிலிருந்து பல கட்சிகள் திமுக கூட்டணிக்கு வந்திருக்கும் சூழ்நிலையில் அவர்களின் தேவை என்ன? எத்தனை தொகுதிகள் ஒதுக்கலாம் என்பது குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கிடையில், தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏற்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று, சமூக ஜனநாயக கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருப்பது தான். இந்தக் கூட்டணி அமைப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்டது.

அப்போது அவர்களுக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பில் அதிமுக பாஜகவுடன் மீண்டும் இணைந்ததால், SDPI அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியது. பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த SDPI-க்கு, அதிமுக-பாஜக கூட்டணி ஏற்படுத்திய மாற்றம் காரணமாக புதிய வழியைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்நிலையில், திமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்சிகளை அணுகி வருகிறது. DMDK, MNM போன்ற கட்சிகள் ஏற்கனவே இணைந்த நிலையில், SDPI-யும் இப்போது அதிகாரப்பூர்வமாக திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது.

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்... அதிமுகவை கழட்டிவிடும் கட்சிகள்..!! SDPI திமுகவுடன் கூட்டணி..!!

திமுகவின் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழு SDPI-யை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை சுமூகமாகவும், நம்பிக்கை அளிக்கும் வகையிலும் நடைபெற்றதாக SDPI மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். முக்கியமாக, SDPI தனது உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்டிபிஐ கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனம்... தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு..! Tvk கண்டனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share