×
 

சீமானுக்கு அவ்வளவுதான் லிமிட்... நடவடிக்கை எடுங்க! தவெகவினர் போலீசில் புகார்

விஜய்யை சீமான் தரக்குறைவாக பேசியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் கட்சி ஆரம்பித்தபோது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ஆதரவை தெரிவித்து வந்திருந்தார். ஆனால் சமீப நாட்களில் விஜய் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். விஜயின் தொண்டர்களை அணில்கள் என்று விமர்சித்துள்ளார். விஜயின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் சீமான்.

கோவை டவுன் ஹாலில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் விஜயை தரகுறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையிலான நிர்வாகிகள் சீமான் மீது புகார் கொடுத்துள்ளனர். மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் மீது கொடுத்த புகாரில், கோவை டவுன்ஹால் பகுதியில் கடந்த 14ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசியதாக கூறினர். 

அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை மரியாதை குறைவாக பேசியதாக குறிப்பிட்டனர். விஜய் வழியில் அமைதியுடன் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில் தமிழக வெற்றி கழகத்தினர் செயல்பட்டு வரும் நிலையில் சீமான் விஜயை தொடர்ந்து அவமரியாதையாக பேசி வருவது தங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நடிகன் நாடாள துடிக்கிறான்... விஜய் மீது சீமான் மறைமுக தாக்கு! கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள்

இவ்வாறு சீமான் தொடர்ந்து பேசி வந்தால் இரு கட்சியினர் இடையே கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எனவே இரு கட்சிகளிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் விஜயை தரக் குறைவாக பேசும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புகார் கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'மரங்களை பாதுகாப்பது நமது கடமை'.. மரங்கள் மாநாட்டில் உணர்ச்சி பொங்க பேசிய சீமான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share