×
 

#BREAKING: 2026ல் விஜய் தான்…! தவெகவில் இணைந்த செங்கோட்டையன் உறுதி..!

மக்கள் விரும்பும் புனிதமான ஆட்சியை விஜய் கொடுப்பார் என செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை தான் ஒருங்கிணைப்பேன் என்று உறுதியோடு செயல்பட்டு வந்த செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்திருப்பது அரசியலில் திருப்புமுனையாகவே பார்க்கப்படுகிறது. 

சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த செங்கோட்டையனுக்கு விஜய் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தொடர்ந்து கட்சித் தொண்டையும் செங்கோட்டையனுக்கு விஜய் அணிவித்தார். தொடர்ந்து விஜய்க்கு செங்கோட்டையன் பொன்னாடை போர்த்தி மலர் கொத்து கொடுத்தார்.

தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள செங்கோட்டையனின் ஆதரவாளர்களான சத்தியபாமா உள்ளிட்டோருக்கு விஜய் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள அனைவரையும் கட்சி துண்டு மற்றும் பொன்னாடை அணிவித்து விஜய் வரவேற்றுள்ளார். 

இதையும் படிங்க: #BREAKING: தவெகவில் ஏன் இணைந்தேன்... உண்மையைப் போட்டு உடைத்து செங்கோட்டையன்...!

தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் தூய்மையான ஆட்சியை கேட்கிறார்கள் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வேண்டும் என்று கூறினார். தமிழகத்தில் தூய்மையான ஒரு அரசியலை விஜய் முன்னெடுத்துள்ளார் என்ற செங்கோட்டையன் புகழாரம் சூட்டினார். அன்பிற்கினிய இளவல் விஜய் 2026 இல் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று உறுதிப்பட கூறினார். தமிழக வெற்றி கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கி மக்கள் மனதில் விஜய் இடம் பிடித்துள்ளார் என்று கூறினார். 2026 இல் விஜய் மாபெரும் புரட்சியாக உருவாகுவார் என்றும் கூறினார். புனிதமான ஆட்சியை விஜய் கொடுப்பார் என்றும் உறுதியாக செங்கோட்டையன் கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக கொங்கு மண்டலமே காலியா?... செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்... முழு லிஸ்ட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share