மைனர் பெண்ணுடன் நெருக்கம்..! பெண்கள் மீது ஆபாச வர்ணனை.. சிங்கப்பூர் தமிழ் நடிகர் மீது பாலியல் புகார்..!
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் நடிகரும், ரேடியோ ஜாக்கியும் ஆன குணாளன் 4 பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்தவர் குணாளன். (வயது 43) இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். குணாளன் சிங்கப்பூரில் உள்ள பிரபல ஊடக நிறுவனமான மீடியாகார்பின் தமிழ் ரேடியோ ஸ்டேஷனின் ஒலி எப்.எம்., ரேடியோவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இது தவிர, சிங்கப்பூரில் வெளியான சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
ஒலி 968 என்ற நேடியோ நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும், தயாரிப்பாளருமாக குணாளன் பணியாற்றி வந்தார். அவரது பேச்சு காரணமாக அவரது ரசிகர்கள் குணாளனை நெருப்பு குணா என அழைத்தனர். அவரது பேச்சுக்கு ஏராளமான ரசிகர்களும், பெண் ரசிகைகளும் உள்ளனர். இதனாலே சிங்கப்பூரில் செலிபிரிடிட்டியா குணாளன் வலம் வந்தார்.
இந்நிலையில் குணாளன் மீது 4 பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட 7 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் குணாளன் இரண்டு பெண்களை கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆபாசமாக வர்ணித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த 2 பெண்களின் உடலை தவறான கண்ணோட்டத்துடன் புகைப்படம் எடுத்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த புகாரில் குணாளன், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி, குணாளன் தமது செல்போனில், அனுமதியின்றி ஒரு பெண்ணின் அந்தரங்க உறுப்புகளைப் படம் பிடித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி மற்றொரு பெண்ணையும் இதுபோல் படம் பிடித்ததாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எகிறிய மின் கட்டணம்.. மூன்றாவது முறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பலு.. பெண்ணுக்கு இழப்பீடு வழங்க TANGEDCO-க்கு உத்தரவு...
இதுமட்டுமல்லாமல் குணாளன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதிக்கும் 31ஆம் தேதிக்கும் இடையில் 16 வயதுக்குக் குறைவான பெண்ணுடன் பாலியல் தொடர்பில் இருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மைனர் பெண்ணுடன் உடலுறவில் ஈடுபடுவது பெரிய குற்றம் என கருதப்படுவதால், இந்த புகார் சிங்கப்பூரில் பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது, செப்டம்பர் 16ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் தமக்கும் இடையில் நடந்த Instagram உரையாடல்களை குணாளன் டெலிட் செய்ததாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
குணாளன் மீதான தொடர்ச்சியான பாலியல் புகாரால், அவரை வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்கியதாக மீடியாகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. அவரைப் பணிநீக்கம் செய்யும் கடிதம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் மீடியாகார்ப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் குணாளனுக்கு ஆதரவாக யாரும் நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை. வழக்கறிஞருக்கு ஏற்பாடு செய்யவிருப்பதாக அவர் நீதிமன்றத்தில் கூறினார். இந்நிலையில் 16 வயதுக்குக் குறைவான பெண்ணுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தது நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனவும்,
குற்றத்தை மறைக்க அவர் இன்ஸ்டாகிராம் தகவல்களை அழிக்க முயற்சித்தது நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் பெண்ணை தவறாகப் படம் அல்லது வீடியோ எடுக்கும் குற்றத்துக்கு 2 வரை சிறைத்தண்டனை, பிரம்படி, அபராதம் அல்லது இவற்றில் ஏதாவது இரண்டு விதிக்கப்படலாம் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, குணாளன் மீதான வழக்குகள், அந்நாட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, குணாளனின் வழக்கறிஞர் ஆஜரானார். எனினும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது குணாளன் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனக்கூறி, வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 21க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ‘மொழி பிரச்சனை, டீலிமிட்டேஷன் நாட்டை வடக்கு-தெற்கு என பிளவுபடுத்தும்’.. மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை..!