×
 

தனியாக இருந்த 14 வயது சிறுமியின் ஆடையைக் கிழித்து மானபங்கம்... அதிமுக பிரமுகர் அத்துமீறல்...! 

தனியாக இருந்த 14 வயது சிறுமியிடம் ஆடைகளைக் கிழித்து அத்துமீறியதாக அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலப்பிரச்னையில் அத்துமீறி 14 வயது சிறுமியை தாக்கி மானபங்கப்படுத்திய அதிமுக பிரமுகர் மீது வழக்குப் பதிவுசெய்ய எஸ்பியிடம் சிறுமி புகார்  அளித்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

மயிலாடுதுறையை அருகே பனையக்குடி  கண்ணன் என்பவர் குடும்பத்தினர் கடந்த 4 தலைமுறைகளாக 50 சென்ட் கோயில் இடத்தை அனுபவித்து வருகின்றனர். முன்னாள் மாவட்டக் கவுன்சிலரான அதிமுகவை சேர்ந்த பொன்னையன் என்பவர் கண்ணன் குடும்பத்தாரை விரட்டிவிட்டு  நிலத்தை அபகரிக்க பல வழிகளில் முயற்சித்துள்ளனர். அனுபவமும் அனைத்து ஆதாரங்களும் கண்ணன் குடும்பத்தாருக்கு சாதகமாக இருந்ததால் ஆத்திரமடைந்துள்ளார்.

 கடந்த   மாதம் 26ஆம் தேதி பொன்னையன் தூண்டுதலின்பேரில் 10க்கும்மேற்பட்டோர் பொக்லின் எந்திரத்துடன் சென்று கண்ணனது இடத்தை அடித்து உடைத்து மரங்களை பிடுங்கி ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தியதுடன் தனியாக இருந்த கண்ணனின் மகளை அடித்தும் உதைத்தும் அவரது ஆடைகளை கிழித்தும் அவமானப்படுத்தியுள்ளார். 

இதையும் படிங்க: “நீயும் அவளும் லெஸ்பியனா?” - வாயில் மதுவை ஊற்றி பாலியல் டார்ச்சர்... புது மணப்பெண்ணை சல்லி, சல்லியாய் சிதைத்த கணவன்...!

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி மணல்மேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் பாதிக்கப்பட்ட சிறுமி மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தால் டிஎஸ்பியிடம் அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.    
 

இதையும் படிங்க: அப்டியே விட்ருவோமா? ஒருங்கிணைப்பு குழு ரெடி! மாஸ் காட்டும் செங்கோட்டையன்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share