அவன் என் ஆளு!! Boy friend-காக அடித்துக் கொண்ட 10ம் வகுப்பு மாணவிகள்!!
தலைநகர் டெல்லியின் ரோகிணி பகுதியில், 10-ம் வகுப்பு மாணவியை சக மாணவிகள் 4 பேர், அந்த மாணவியை தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது.
தலைநகர் டெல்லியின் ரோகிணி பகுதியில் பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி, தனது பள்ளி தோழிகளால் பிளேடால் சரமாரியாக தாக்கப்பட்டு காயமடைந்தார். இந்த தாக்குதலில் மாணவியின் முகம் மற்றும் பின்புறத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. ரத்தம் சொட்டச்சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, காயமடைந்த இடங்களில் 20 தையல்கள் போடப்பட்டன.
சம்பவம் நடந்த அன்று, மாணவி ரோகிணி பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 4 மாணவிகள் அவரை வழிமறித்து தாக்கியதாக தெரிகிறது. இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் படிக்கும் மாணவிகள். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட பிளேடால் மாணவியின் உடலில் ஆழமான கீறல்கள் ஏற்பட்டன. இதனால் அவர் கடுமையான வலியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் குடும்பத்தினர் உடனடியாக ரோகிணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் உடனே விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், தாக்கப்பட்ட மாணவிக்கும் மற்றொரு மாணவிக்கும் இடையே சமீபத்தில் ஆண் நண்பருடன் பேசுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன்! புதிய விடியல் உதயமாகிவிட்டது!! மோடி பிராமிஸ்!
இந்த வாக்குவாதம் முற்றியதால், அந்த மாணவி தனது மூன்று தோழிகளுடன் சேர்ந்து, 10-ம் வகுப்பு மாணவியை கேலி செய்து வந்துள்ளார். இந்த கேலி மற்றும் மிரட்டல்கள் தொடர்ந்த நிலையில், சம்பவத்தன்று அவர்கள் பிளேடைப் பயன்படுத்தி தாக்கியதாக காவல் துறை தெரிவித்தது.
இந்த வழக்கில், 16 வயதுடைய இரண்டு மாணவிகளும், 14 வயதுடைய ஒரு மாணவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு மாணவி தலைமறைவாக இருப்பதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் காவல் துறை தெரிவித்தது. இந்த சம்பவம் ரோகிணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவிகளிடையே இத்தகைய வன்முறை நடவடிக்கைகள் அதிகரித்து வருவது பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடையே கவலையை உருவாக்கியுள்ளது.
காவல் துறையினர், இந்த தாக்குதலுக்கு முழு காரணம் குறித்து ஆழமாக விசாரித்து வருகின்றனர். மாணவிகளிடையே சமூக ஊடகங்களில் ஏற்பட்ட மோதல்களும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பள்ளி நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க, பள்ளிகளில் மாணவர் நல ஆலோசனை மையங்களை வலுப்படுத்த வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்.. செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்..!!