×
 

புத்தாண்டு கொண்டாட சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்! முன்னாள் காதலன் வெறிச்செயல்!

அமெரிக்காவில் காணாமல்போனதாக கூறப்பட்ட நிகிதா, ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்தார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் நிகிதா கோடிஷாலா அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகளாவிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகாத நிகிதா, மேரிலாண்டின் எல்லிகாட் சிட்டி பகுதியில் தனியாக வசித்து வந்தார். 

அவர் வேதா ஹெல்த் என்ற ஆன்லைன் மருத்துவ சேவை நிறுவனத்தில் தரவு மற்றும் வியூக வல்லுநராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு சிறந்த பணியாளர் விருது பெற்ற அளவுக்கு திறமையானவராக விளங்கிய நிகிதா, புத்தாண்டில் புதிய கனவுகளுடன் அடியெடுத்து வைக்க எதிர்பார்த்திருந்தார்.

டிசம்பர் 31 ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக நிகிதா, அதே நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் காதலரான அர்ஜுன் சர்மாவின் கொலம்பியா பகுதியிலுள்ள வீட்டுக்கு சென்றார். அர்ஜுன் சர்மாவும் இந்தியாவைச் சேர்ந்தவர்தான். அங்கு சென்ற பிறகு நிகிதா தனது வீட்டுக்கு திரும்பவில்லை. தொலைபேசியும் எடுக்கவில்லை. இதனால் ஐதராபாத்தில் வசிக்கும் நிகிதாவின் பெற்றோர் பதறி அடித்தனர்.

இதையும் படிங்க: எல்லைத் தாண்டி மீன்பிடிப்பு... ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் காவல் நீட்டிப்பு...!

புத்தாண்டன்று அர்ஜுன் சர்மாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, "டிசம்பர் 31 இரவு என் வீட்டுக்கு வந்து சென்றுவிட்டார், அதன் பிறகு எனக்கு எதுவும் தெரியாது" என்று கூறினார். நிகிதாவின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன்படி ஜனவரி 2 ஆம் தேதி அர்ஜுன் சர்மா மேரிலாண்ட் போலீசில் நிகிதா காணவில்லை என்று புகார் அளித்தார்.

போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அர்ஜுனிடம் பேச முயன்ற போது அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது, அர்ஜுன் சர்மா அமெரிக்காவிலேயே இல்லை என்பது தெரியவந்தது. புகார் அளித்த அதே நாளில் விமானம் ஏறி இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

உடனடியாக அர்ஜுன் சர்மாவின் கொலம்பியா பகுதியிலுள்ள வீட்டுக்கு சென்ற போலீசார், உள்ளே நுழைந்ததும் கடும் துர்நாற்றம் வீசியது. அதிர்ச்சியடைந்த அவர்கள் தேடிய போது, நிகிதாவின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார்.

போலீசாருக்கு உடனடியாக புரிந்துவிட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருவருக்கும் ஏதோ பிரச்னை ஏற்பட்டு, அர்ஜுன் சர்மா நிகிதாவை கொலை செய்துவிட்டு, போலீசில் புகார் அளித்துவிட்டு இந்தியாவுக்கு தப்பியோடியிருக்கிறார். இருவரும் முன்னாள் காதலர்கள் என்பதால், என்ன காரணத்துக்காக இந்தக் கொலை நடந்தது என்பது இன்னும் தெரியவில்லை.

மேரிலாண்ட் போலீசார் அர்ஜுன் சர்மாவுக்கு முதல் மற்றும் இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டுகளில் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளனர். அவரைப் பிடிக்க இந்திய அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளனர். அமெரிக்காவும் இந்தியாவும் கொடூர குற்ற வழக்குகளில் ஒத்துழைப்பு அளிக்கும் ஒப்பந்தம் உள்ளதால், அர்ஜுனை கைது செய்து அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்துவது எளிதாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

நிகிதா சிறுவயது முதலே படிப்பில் சிறந்து விளங்கியவர். ஐதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மருந்தியல் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவில் மேரிலாண்ட் பால்டிமோர் கவுண்டி பல்கலைக்கழகத்தில் சுகாதார தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பல கனவுகளுடன் புத்தாண்டை எதிர்நோக்கிய நிகிதாவின் வாழ்க்கை புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே கொடூரமாக முடிவுக்கு வந்துவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, நிகிதாவின் குடும்பத்தினருக்கு அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் ஆறுதல் தெரிவித்து, தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிங்க: CASH BACK... DEEP FAKE... உஷார் மக்களே..! பண்டிகை கால மோசடி... எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share