×
 

சபரிமலை தங்கம் திருட்டு! மாஸ்டர் மைண்ட் தலைமை அர்ச்சகர் அதிரடி கைது! சதி திட்டம் அம்பலமான பின்னணி!!

சபரிமலை தங்கத் திருட்டில் முக்கிய பங்கு இருப்பதாகச் சொல்லி தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரரு என்பவரைச் சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.

திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2019-ல் நடந்த தங்கத் திருட்டு வழக்கு இப்போது மிகுந்த சூடுபிடித்துள்ளது. இதில் மிக முக்கியமான திருப்பமாக, கோயிலின் தலைமை அர்ச்சகரான கண்டரரு ராஜீவரவு இன்று (ஜனவரி 9) சிறப்பு புலனாய்வுக் குழுவால் (எஸ்ஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.

சபரிமலை கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். 2019-ல் கோயிலில் நடந்த புனரமைப்புப் பணிகளின்போது, கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கருவறைக் கதவுகளில் இருந்த தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்டன. அப்போது தங்க முலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கப்பட்டன.

ஆனால், இந்தப் பணிகளின்போது சுமார் 4 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது. துவார பாலகர் சிலைகளின் தங்கக் கவசம் மற்றும் கருவறைக் கதவுகளில் இருந்த தங்கம் ஆகியவை திருடப்பட்டன. இதைத் தொடர்ந்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு போலீசில் புகார் அளித்தது. முதலில் போலீசார் விசாரித்தனர். பின்னர் கேரள உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

இதையும் படிங்க: சபரிமலை கோயிலில் இருந்து மேலும் தங்கத்தை திருட சதி! ஆதாரங்களை அழிக்க முயற்சி! SIT அறிக்கையில் பகீர்!!

இதுவரை இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர், நிர்வாக அதிகாரி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரவு மீது குறிப்பிடத்தக்க சந்தேகம் எழுந்தது. உன்னி கிருஷ்ணன் போத்தி என்பவருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், தங்கத் திருட்டில் முக்கிய பங்கு இருந்ததாகவும் ஆதாரங்கள் கிடைத்தன.

கைது செய்யப்பட்ட சிலரின் வாக்குமூலங்களில், உன்னி கிருஷ்ணன் போத்தியை சபரிமலைக்கு அழைத்து வந்தது ராஜீவரவு தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், வெள்ளிக்கிழமை காலை ராஜீவரவை எஸ்ஐடி அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு அழைத்தனர். பிற்பகல் வரை நீண்ட விசாரணை நடத்தப்பட்ட பிறகு, அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தக் கைது நடவடிக்கை சபரிமலை பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை இன்னும் தீவிரமாக நடந்து வருவதால், மேலும் பலர் இதில் சிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்ந்து கேரள அரசியலிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: சபரிமலை தங்கம் மாயமான விவகாரம்! 6 வாரம்தான் டைம்! எஸ்ஐடிக்கு கேரளா ஐகோர்ட் அவகாசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share