இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த காவலர்!! இன்ஸ்பெக்டர் வீட்டில் நடந்த கொடூரம்! கோவையில் அதிர்ச்சி!
வீட்டில் இருந்த இளம்பெண் குளித்தபோது, அதனை மறைந்திருந்து மாதவகண்ணன் செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் டிரைவராகப் பணியாற்றி வந்த மாதவகண்ணன் (27) என்ற இளைஞர், இன்ஸ்பெக்டர் வீட்டில் தங்கியிருந்த உறவினர் இளம்பெண்ணை குளிக்கும்போது மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாதவகண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாதவகண்ணன், பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரின் டிரைவராகப் பணியாற்றி வந்தார். இன்ஸ்பெக்டருடன் குடும்ப உறுப்பினர் போல நெருக்கமாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இன்ஸ்பெக்டர் தனது மகள்களைப் பார்த்துக்கொள்ள உறவினரான ஒரு இளம்பெண்ணை மதுக்கரை பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்திருந்தார்.
இதையும் படிங்க: ஹாப்பி கிறிஸ்துமஸ்!! கொண்டாட்டத்துக்கு தயாராகும் சென்னை! 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!
கடந்த இரு நாட்களாக வேலைப் பளு காரணமாக இன்ஸ்பெக்டர் வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. இதனால், வீட்டில் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறி, தனது டிரைவரான மாதவகண்ணனை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால், இளம்பெண் குளிக்கச் சென்றபோது, மாதவகண்ணன் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதை அறிந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்து உடனடியாக செல்போன் மூலம் இன்ஸ்பெக்டரிடம் தகவல் தெரிவித்து அழுதுள்ளார். இதையடுத்து, மதுக்கரை போலீஸ் நிலையத்தில் இளம்பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாதவகண்ணன் குற்றம் செய்தது உறுதியானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் அதிகாரியின் டிரைவரே இதுபோன்ற செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. கைது செய்யப்பட்ட மாதவகண்ணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.3,000மா? ரூ.5,000மா? பொங்கல் பரிசு ரொக்கம் எவ்வளவு? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!