SIR ல் குளறுபடி..? மறைந்த பாடலாசிரியர் புலமைப்பித்தன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்ததால் அதிர்ச்சி...!
மறைந்த பாடல் ஆசிரியர் புலமைப்பித்தன் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருப்பதாக வெளியான தகவல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழ் திரைப்பட உலகின் புகழ்பெற்ற பாடலாசிரியரும், கவிஞரும், அரசியல் ஆளுமையுமான புலவர் புலமைப்பித்தன் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். 85 வயதான இவர், எம்.ஜி.ஆர் திரைப்படங்களுக்கு ஏராளமான புகழ்பெற்ற பாடல்களை எழுதியவர். அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவராகவும் இருந்தவர்.
இவரது மறைவு தமிழக அரசியல் மற்றும் இலக்கிய உலகில் பெரும் இழப்பாகக் கருதப்பட்டது.2025 ஆம் ஆண்டு இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலை முழுமையாகச் சீரமைக்கும் பணியை மேற்கொண்டது. இப்பணியின் நோக்கம் போலி வாக்காளர்கள், இரட்டைப் பதிவுகள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கி, பட்டியலைத் தூய்மைப்படுத்துவதாகும்.
இதன்படி, தமிழ்நாட்டில் சுமார் 97.38 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு, டிசம்பர் 19 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இறந்தவர்களின் பெயர்களாகக் குறிப்பிடப்பட்டு நீக்கப்பட்டவர்கள் சுமார் 27 லட்சம் பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மறைந்த புலமைப்பித்தனின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: SIR... பெயர் சேர்க்க 39 ஆயிரம் படிவங்கள் வந்திருக்கு... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்...!
மயிலாப்பூர் தொகுதியில் 172வது வார்டில் மறைந்த பாடல் ஆசிரியர் புலமைப்பித்தன் பெயர் இடம்பெற்று இருப்பதாக பரவும் தகவல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தமிழகத்தில் கடும் எதிர்ப்பையும் மீறி sir பணிகள் நடந்து முடிந்தன. தப்பு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் மீண்டும் குளறுபடிகள் ஏற்பட்டு இருப்பதாக வெளியாகும் தகவல் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING: முதல்வர் ஸ்டாலினின் சொந்தத் தொகுதியில் 1 லட்சம் பேர் நீக்கம்…முக்கிய அறிவிப்பு…!