மது கேட்டு அடம்பிடித்த தந்தை.. சுத்தியலால் அடித்தே கொன்ற மகன்.. போலீசில் வாக்குமூலம் கொடுத்து சரண்..!
சென்னை எண்ணூரில் மது கேட்டு அடம்பிடித்த தந்தையின் தொல்லை தாங்காமல், பெற்ற மகனே சுத்தியலால் அடித்தே கொன்ற சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எண்ணூர் சத்திய வாணி முத்து நகர் பகுதியில் வசித்து வருபவர் முருகன் . (வயது 48). இவர் அப்பகுதியில் கூலிவேலை செய்து வந்தார். இவருக்கு 2 மகன்கள். மதுபோதைக்கு அடிமையான முருகன், தினமும் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து, மனைவி, மகன்களுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம் என கூறப்படுகிறது. எப்போதும் போல நேற்று இரவும் முருகன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் தகராறில் ஈடுபட்ட முருகன், தனது மனைவி, மகன்களிடம் மீண்டும் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். மனைவி தன்னிடம் பணம் கிடையாது என மறுத்துள்ளார். மூத்த மகனும் பணம் இல்லை என மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காலில் அடிபட்டு, பிளேட் வைக்கப்பட்ட நிலையில் வீட்டில் ஓய்வில் இருந்த தனது இளைய மகனிடம் மது அறுந்துவதற்கு பணம் கேட்டுள்ளார் முருகன். குடும்பத்தில் அனைவரிடம் பணம் கேட்டு தொல்லை அளிப்பதை பார்த்துக் கொண்டிருந்த இளைய மகன் பிரபாகரன், ஏன் இப்பிடி குடிச்சிட்டு வந்து தொல்லை பண்ணுறீங்க என கோவப்பட்டுள்ளான். இதன் காரணமாக இரண்டாவது மகன் பிரபாகரனுக்க்கும் தந்தை முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை முருகன் திடீரென கோபத்தில் கையில் சுத்தியலை எடுத்து மகனை தாக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. அவரை தடுத்து பார்த்து பொறுமை இழந்த பிரபாகரன், பின்னர் சுத்தியை பிடுங்கி தந்தையை தாக்க துவங்கி உள்ளான்.
இதையும் படிங்க: வெயிட்டிங் பார் 302..? இன்ஸ்டா ரீல்ஸால் சிக்கிய சிறுவர்கள்.. கொலைக்கு திட்டம் தீட்டியது அம்பலம்..!
குடும்பத்தினர் இருவரையும் தடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் பிரபாகரன் ஆத்திரத்தில் தாக்கியதில் தலை மற்றும் காது ஆகிய இடங்களில் அடிபட்டு தந்தை முருகன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துள்ளார். இதனால் அனைவரும் பயந்து போயினர். உடனே ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தந்தையை காப்பாற்ற அவசர உதவிக்காக 108 எண்ணுக்கு அழைத்து ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைந்துள்ளது. ஆம்புலன்ஸில் வந்தவர்கள் முருகனை சோதனை செய்து பார்த்ததில் முருகன் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. இது கொலையாக இருக்கும் என கருதியவர்கள் எண்ணூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் எண்ணூர் உதவி ஆணையர் வீரகுமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற எண்ணூர் போலீசார் குடும்பத்தினரிடம் விசாரித்துள்ளனர். அப்போது இளைய மகன் பிரபாகரன், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. விசாரணையில், பிரபாகரன் தனது பணம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தொல்லை கொடுத்ததகவும், பணம் தராததால் தன்னை சுத்தியலால் தந்தை தாக்க வந்த போது, சுத்தியலை பிடிங்கி அடித்து கொலை செய்ததாக கூறி உள்ளார். கொலையாளியே கொலையை ஒப்புக் கொண்டதன் பேரில் எண்ணூர் போலீசார் பிரபாகரனை கைது செய்தனர். முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: போலீசை தாக்கி விட்டு தப்பிய ரவுடிகள்.. தேடிப்பிடித்து கைது செய்த போலீஸ்.. மதுபோதையில் இருந்தவர்களுக்கு மாவுக்கட்டு..!