×
 

ஈழத் தமிழர்கள் பத்தி பேசுங்க விஜய்..! தமிழக முதல்வருக்கு இலங்கை எம்.பி. அர்ச்சுனா வலியுறுத்தல்..!

விஜயின் சேவை மக்களுக்கு தேவை என தமிழக முதல்வர் குறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலை புரட்டிப் போட்ட தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று முதலமைச்சர் பொறுப்பேற்கும் நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து அவருக்கு வரும் வாழ்த்துகள் மற்றும் ஆதரவு அலைகள் தமிழ் உலகம் முழுவதும் பெரும் எதிரொலியை ஏற்படுத்தின.

அவற்றில் மிகவும் கவனத்தை ஈர்த்தது யாழ்ப்பாணம் மாவட்ட சுயேச்சை எம்.பி. அர்ச்சுனா ராமநாதனின் பேச்சானது, விஜய் ஆதரவாக இருந்தது. இலங்கைத் தமிழர்களின் துயரங்களை நேரடியாக எடுத்துரைத்த அவரது பேச்சு, விஜயின் தலைமையில் தமிழகம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக வலுவான குரல் எழுப்பும் என்ற எதிர்பார்ப்பை வலுப்படுத்தியது.

முன்னதாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அர்ச்சுனா ராமநாதன், முதலில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். “எங்கள் தமிழ் மக்களின் இதயத்தை கவர்ந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு, இலங்கைத் தமிழன், அடக்கப்பட்ட தமிழன் என்ற தமிழ் குரலாக பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார். இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்காக விஜய் பேச வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி அதிரடி! வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்களின் பதவிகள் பறிப்பு!

தங்கள் இனம் அழிக்கப்படும்போது திமுகவும் அதிமுகவும் வேடிக்கை பார்த்ததாகவும் தெரிவித்தார். சீமான் வாக்குக்காகவே ஈழத் தமிழ் குறித்து பேசியதாகவும் விமர்சித்தார். எனவே விஜயின் சேவை மக்களுக்கு தேவை என்று கூறியுள்ள அவர் ஈழ தமிழர்கள் குறித்து விஜய் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: விஜய் குதிரை பேரம் நடத்தல..! நான் நம்புறேன்..! வைகோ ஃபுல் சப்போர்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share