×
 

தனியார் கல்லூரி நிர்வாகி மீதான பாலியல் புகாரில் திடீர் ட்விஸ்ட்... பரபரக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

மேட்டுப்பாளையம் அருகே பெட்டதாபுரம் பகுதியில் தனியார் கல்லூரி நிர்வாகி மீது அளிக்கப்பட்ட பாலியல் புகாரில் தீடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது. 

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெட்டதாபுரம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதன்மை கல்லூரி நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த பிரசன்னா என்பவர்  மீது அந்த கல்லூரியில் பணியாற்றிய வந்த பெண் ஒருவர் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார்.

அதில் பிரசன்னா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரசன்னாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இன்று காரமடையில் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் செய்தியாளர்களை சந்தித்த கல்லூரியின் மனிதவள மேம்பாட்டு மேலாளர் மனோகரன் இதுகுறித்து பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 

அதில் கல்லூரி நிர்வாகி மீது புகார் அளித்த பெண்ணின் கணவர் ஸ்ரீதர் இவர் கல்லூரியில் ஏ.சி மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். கல்லூரி ஏ.சி முழுவதும் இவர் பராமரிப்பு செய்து வந்த நிலையில் ,கடந்த மாதம் பணிக்கு அவரை அழைத்தும் அவர் வராததால் வேறு ஒருவருக்கு அந்த பணியை கல்லூரி நிர்வாகம் வழங்கியதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: 9ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்.. சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு வலை..!

இதனால் கோபமடைந்த ஸ்ரீதர் காரமடை டீச்சர்ஸ் காலனி பாலாஜி நகரில் உள்ள பிரசன்னா வீட்டிற்கு மார்ச் 21 ஆம் தேதி இரவு 2 மணிக்கு தனது மனைவியுடன் சென்று அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி, இருசக்கர வாகனம், வீட்டின் ஜன்னல் கண்ணாடி ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசன்னா அது குறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மார்ச் 21 ஆம் தேதி காரமடை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் மது போதையில் தான் கோபப்பட்டு நடந்து கொண்டதாக போலீசாரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததால் காவல் நிலையத்தில் வைத்தே சமரசம் செய்யபட்டு அந்த பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர் கடந்த   12 ஆம் தேதி ஸ்ரீதர் மனைவி கல்லூரி நிர்வாகி பிரசன்னா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தங்களை பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடந்ததாவும், அதன் பேரில் உரிய விசாரணை நடத்தாமல் பெண் அளித்த புகார் என்பதால் வழக்கு பதிவு செய்யபட்டதாக விளக்கம் அளித்துள்ளனர் 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகள் வெளியிட்டுள்ளது. அதில் கார் கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் மற்றும் பெண் மானபங்கபடுத்த பட்டதாக சொன்ன தேதியில் வழக்கம் போல எந்த சலனமும் இன்றி அந்த பெண் கல்லூரியில் இருந்து வெளியேறும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த பொய் புகார் சம்பவம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளனர் .

இதையும் படிங்க: ஓடும் காரில் பலாத்கார முயற்சி இளம்பெண் பலி, தங்கை படுகாயம்.. 30 நிமிட மரண போராட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share