×
 

காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் அறிவிப்பு 3 முறை ஒத்திவைப்பு!! 'பேரம் பஞ்சாயத்து' எதிரொலியா?! உற்சாகம் இழந்த தொண்டர்கள்!

தமிழக காங்.,ல் புதிய மாவட்ட தலைவர்கள் அறிவிப்பை அகில இந்திய தலைமை மூன்று முறை தள்ளி வைத்துள்ளதால் கட்சியினர் உற்சாகம் இழந்துள்ளனர்.

சென்னை: பாஜகவின் தொடர் வெற்றிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பல மாநிலங்களில் அமைப்பு ரீதியாக பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல ஆண்டுகளாக பதவியில் இருக்கும் மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து புதிய தலைவர்களை நியமிக்க அகில இந்திய தலைமை முடிவு எடுத்தது. இதற்காக பொறுப்பாளர்கள் குழு அமைக்கப்பட்டு தீவிர பணிகள் நடத்தப்பட்டன.

தமிழகத்தில் மொத்தம் 77 மாவட்டங்களில் 74 மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. புதிய மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆறு பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு மாவட்டம் வாரியாக நேர்காணல்கள் நடத்தப்பட்டன. இந்த பணிகள் முடிந்து விரிவான அறிக்கை ஒரு மாதத்துக்கு முன்பே டெல்லி அகில இந்திய தலைமைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க: திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள்!! மாநாட்டில் உடைத்து பேசிய மா.கம்யூ.!! கூட்டணி கட்சியே இப்படியா?

இதன்படி புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் டிசம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது டிசம்பர் 22ஆம் தேதிக்கும் பின்னர் 29ஆம் தேதிக்கும் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஜனவரி 5ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொடர் தாமதம் கட்சியினரிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் உற்சாகத்தை இழந்து நிற்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் சீனியர் நிர்வாகிகள் கூறுகையில், தமிழக காங்கிரஸில் நீண்டகாலமாக நிலவும் கோஷ்டி பூசலே இதற்கு முக்கிய காரணம் என்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏவாக போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று பல மாவட்ட தலைவர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மாவட்ட தலைவர் பதவி பறிபோனால் சீட் வாய்ப்பும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் அவர்கள் ஒட்டுமொத்த எதிர்ப்புகளை டெல்லி தலைமைக்கு புகாராக அனுப்பி வருகின்றனர். 

மேலும், புதிய பதவிக்காக பல லட்சம் ரூபாய் பேரம் நடந்ததாக காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஒருவரே கடுமையான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இதனாலேயே அறிவிப்பு தொடர்ந்து தள்ளி வைக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம் வேண்டாம் என்று மூத்த தலைவர்கள் பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளதாகவும் தெரிகிறது. இந்த உள்கட்சி மோதல்கள் தமிழக காங்கிரஸை மேலும் பலவீனப்படுத்தும் என்ற அச்சம் கட்சியினரிடம் நிலவுகிறது. அறிவிப்பு வெளியாவதே சந்தேகம் என்று சீனியர் நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த தாமதம் தமிழக காங்கிரஸின் அமைப்பு பலத்தை பாதிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: 82 வயதா? 28 வயதா? வைகோவின் நெஞ்சுரத்தை பாராட்டிய ஸ்டாலின்! நடைபயணம் துவக்கிவைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share