நள்ளிரவில் திக்..திக்....!! பிரபல ரவுடியை பிடிக்கச் சென்ற 5 காவலர்களுக்கு விடிய, விடிய காத்திருந்த அதிர்ச்சி...!
உடனடியாக களத்திற்கு விரைந்து வந்த தென்காசி தீயணைப்புத்துறையினர் மலைக்குன்றில் சிக்கியிருந்த 5 போலீசாரையும் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.
மலைப்பகுதியில் பதுங்கிய பிரபல ரவுடியை தேடிச் சென்ற போலீசார் இறங்க முடியாமல் மலைக்குன்று மீது இரவு முழுவதும் சிக்கித் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை கலக்கி வந்த தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பாலமுருகன் போலீஸ் காவலில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் கடையம் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் அவரது மனைவி மனைவி ஜோஸ்வினாவுடன் மறைந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து தென்காசி மாவட்ட சிறப்புப் படை காவலர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலையிலிருந்து போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு நேரமாகியதையடுத்து சக்தி வாய்ந்த விளக்குகளைக் கொண்டு தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென கடும் மழை பெய்த மழையிலும் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்குள்ள மலைக்குன்று மீது ஏறிய 5 போலீஸார் மீண்டும் இறங்க முடியாமல் நீண்ட நேரமாக சிக்கித் தவித்து வந்தனர். அவர்கள் சுமார் ஆயிரம் அடிக்கு மேல் உயரமுள்ள குன்றுக்கு மத்தி பகுதியில் சிக்கி தவிப்பதால் அவர்களை மீட்க முடியாமல் சக போலீசாரும் திணறினர்.
இதையும் படிங்க: தென்காசி பேருந்து கோர விபத்து... நிவாரணத் தொகையை அறிவித்தது தமிழக அரசு...!
இந்த நிலையில் ரவுடியை தேடுவதை நிறுத்தி ஆபத்தில் சிக்கிய 5 போலீசாரை மீட்கும் பணியில் போலீசார் கவனம் செலுத்தினர். தீயணைப்பு மீட்பு படையினர் அல்லது பேரிடர் மீட்புப் படையினர் வந்து மீட்கக் கூடிய சூழல் உருவானது. இதனால் போலீசார் மத்தியில் பெரும் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனடியாக களத்திற்கு விரைந்து வந்த தென்காசி தீயணைப்புத்துறையினர் மலைக்குன்றில் சிக்கியிருந்த 5 போலீசாரையும் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.
தற்போது கடையம் ராமநதி அணை அருகே உள்ள மலை குன்றில் தலை மறைவாக உள்ள ரவுடி பாலமுருகனை தேடும் பணி நேற்றிரவு மழையால் தடைபட்டது. இதனால் மழை சற்றே குறைந்துள்ளதால், ட்ரோன் மூலம் தேடுதல் பணியை போலீசார் தொடங்கியுள்ளனர். சுமார் 18 மணி நேரமாக உணவு, தண்ணீர் இன்றி மனைவியுடன் தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி பாலமுருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வேதனையா இருக்கு... தென்காசி பேருந்து விபத்து... மீட்புப் பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஆணை...!