×
 

முதல்வர் விஜய்யை கேள்வி கேட்டவுடன் சட்டசபை லைவ் நிறுத்தம்! நேரலை தொடரும் என்ற தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?!

தமிழ்நாட்டில் சட்டசபை நேரலை எப்போதும் தொடரும், நிறுத்தப்படாது என்று விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியாக அறிவித்த நிலையில் அதை இரண்டாவது நாளே சட்டசபையில் தவெக அரசு மீறி உள்ளது.

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தின் நேரடி ஒளிபரப்பு (Live Telecast) எப்போதும் தொடரும், நிறுத்தப்படாது என தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்த முதல்வர் விஜயின் உறுதிமொழியை இரண்டாவது நாளே தவெக அரசு மீறியுள்ளது. இந்தச் சம்பவம் சட்டமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை முதல் மேகதாது அணை விவகாரம் தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க விவாதங்கள் அவையில் நடைபெற்றன. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாமக சௌமியா அன்புமணி, தி.மு.க. சட்டமன்றக் குழுத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் காகிதம் இல்லாமல், புள்ளிவிவரங்களுடன் சக்திவாய்ந்த உரைகளை நிகழ்த்தினர். இந்த உரைகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு மக்களை சென்றடைந்தன.

உதயநிதி ஸ்டாலின் உரையை முடித்த பிறகு, தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு முடிந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ நேரலை ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டது. இந்த திடீர் நடவடிக்கை கோட்டை வளாகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சண்டை செய்ய காத்திருந்த திமுகவுக்கு ஏமாற்றம்!! 2 நாள் பயிற்சி வீணா?! அறிவாலயம் நம்பிக்கை புஸ்ஸ்!

மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானத்தின் மீது ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்று வரும் நேரத்தில் நேரலை நிறுத்தப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதங்கள் அல்லது கூச்சல் ஏற்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் ஊகிக்கின்றன.

தேர்தல் பிரச்சாரத்தில் “சட்டசபை நேரலை எப்போதும் தொடரும்” என விஜய் அளித்த வாக்குறுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ஆட்சியின் இரண்டாவது நாளிலேயே இந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. “விஜய் கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு?” என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் சட்டமன்ற ஜனநாயகத்தின் வெளிப்படைத் தன்மை குறித்து புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. மக்கள் நேரலை ஒளிபரப்பை எதிர்பார்த்திருந்த நிலையில், திடீர் நிறுத்தம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற நேரலை நிறுத்தத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை. 

இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share