×
 

50+ வங்கிக்கணக்குகள்... ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 3 தவெக நிர்வாகிகள் கைது... பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க்?

தாராபுரத்தில்  அன்னிய செலாவணி மோசடி, ஆன்லைன் பண மோசடி வழக்கில் மூன்று தவெக நிர்வாகிகள் சிக்கினர். கோவையில் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த தவெக திருப்பூர் கிழக்கு மாவட்ட வாக்குச்சாவடி அமைப்பாளர் சுஜித்குமார், கட்சி நிர்வாகி விடியல் தில்லை முத்து மற்றும் ராஜேந்திரன் ஆகிய மூவரை, ஆன்லைன் பணப்பரிமாற்ற மோசடி தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை.

போலீஸ் தரப்பில் கிடைத்த தகவலின் படி, தாராபுரம் பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கோவை சைபர் கிரைம் போலீசார், சந்தேகத்திற்கிடமான இணையவழி பணப்பரி மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூவரையும் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே கைது செய்தனர். பின்னர், அவர்களை தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஆரம்பகட்ட விசாரணை மேற்கொண்ட போலீசார், தொடர்ந்து விசாரணைக்காக கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணையில், கடந்த 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் காலகட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து சுமார்  59-லட்சம்  வரை பல்வேறு தவணைகளாக பெறப்பட்டு, அந்தத் தொகை 50-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு பிரித்து அனுப்பப் பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில் 'வெற்றித் தறி' திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்!

பின்னர், அந்தப் பணம் மீண்டும் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட தாகவும், ஒவ்வொரு கணக்கிற்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வரவு வைக்கப்பட்டதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், பணம் பெற்ற வர்களிடம்,  "ஒரு லட்சம் ரூபாய்க்கு ரூ.20 ஆயிரம் கமிஷனாக வைத்துக் கொண்டு, மீதமுள்ள ரூ.80 ஆயிரத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பினால் போதும்" என்று கூறி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி பணத்தை கைமாற்றம் செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் ஹவாலா பணம் பெற்று அதை அப்பாவி பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க செய்து பணப்பரிவர்த்தனை செய்ததாக வழக்கு தொடரப்பட்டு சுஜித் குமார் ஏற்கனவே வேலூரில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்ததாகவும் அதன்பிறகும் இணையவழி நிதி மோசடி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்ட தாகவும் விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தச் சம்பவத்தில் சுஜித்குமாருக்கு நெருங்கிய தொடர்புடையவர்களாகக் கூறப்படும் தாராபுரம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த விடியல் தில்லைமுத்து மற்றும் பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோரும் தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளனர்.

கோவை சைபர் கிரைம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், தனி அறையில் வைத்து, பணம் எங்கிருந்து வந்தது, யாருடைய கணக்குகள் பயன்படுத்தப்பட்டன. இந்தப் பணம் எதற்காக பரிமாற்றம் செய்யப்பட்டது. இறுதியில் எந்தக் கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது இந்த வலையமைப்பில் தொடர்புடையவர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, தாராபுரம் பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இந்தப் பணப்பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் விசாரணையில் வெளியாகியிருப்பதாக கூறப்படுகிறது. 

இது சைபர் கிரைம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் நாட்டைத் தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப்பிரதேசம், புதுடெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த நெட் வொர்க் செயல்பட்டிருக்கலாம் என்றும், பல்வேறு வங்கிக் கணக்குகள் வழியாக பணம் கைமாறியிருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க: அவதூறு பேச்சுக்கு ஆப்பு..! மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை... சபாநாயகர் அதிரடி”

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share