ஜெயலலிதா + விஜயகாந்த் பார்முலா... விஜய்க்கு ரைட் ஹேண்ட் ஆகும் செங்கோட்டையன்... மீண்டும் திரும்பும் அரசியல் வரலாறு...!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அடுத்தப்படியான முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து முழு விவரங்களை பார்க்கலாம்...
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அடுத்த படியாக உள்ள பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி வந்த செங்கோட்டையனை, கட்சியிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியானது. அதற்கு ஏற்ப, சென்னை தலைமைச் செயலகத்தில், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த செங்கோட்டையன், கோபிச்செட்டிபாளையத்தின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இன்று காலை 11 மணி அளவில் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் விஜயை சந்திக்கும் செங்கோட்டையன் கட்சியில் இணைய உள்ளதாக தாவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான முன்னோட்டமாக இன்று தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைமை அலுவலகத்தில் பவுன்சர்கள் பாதுகாப்போடு விஜய் வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தினுடைய அலுவலகத்திற்கு அருகிலேயே உள்ள ஆதவ் அர்ஜூனாவுடைய கெஸ்ட் ஹவுஸில் தங்க வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. காரணம் சென்னையிலிருந்து இங்கு வருவதற்கு தாமதமாகும். உடனடியாக வர வேண்டும் என்பதற்காகவே அவர் தவெக அலுவலகத்திற்கு அருகிலேயே தங்கவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! தவெக தலைவர் விஜயுடன் செங்கோட்டையன் சந்திப்பு..!
செங்கோட்டையன் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக அதிமுகவில் பணியாற்றியவர். அதாவது எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே அல்லது எம்ஜிஆர் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே எம்ஜிஆர் உடன் நெருக்கமாக இருந்தவர். அதன் காரணமாக கட்சி ஆரம்பித்த போது அதில் பயணித்தவர். அதிமுகவின் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். சாதாரண ஒரு கிளை செயலாளராக தொடங்கி மாவட்ட செயலாளர் பிறகு அமைப்பு செயலாளர், தலைமை நிலைய செயலாளர், கட்சி ஆட்சியில் இருந்த போது அவை முன்னவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை அலங்கரித்தவர் மற்றும் மிக நீண்ட அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டில் ஒன்பது முறை வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் என்று எடுத்துக்கொண்டால் விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவுக்கு அரிதாக இருக்கக்கூடிய நபர்களில் முக்கியமானவராக செங்கோட்டையன் இருக்கிறார்.
அதிமுகவில் எப்படி பண்ருட்டி ராமச்சந்திரன் முக்கியமான நபராக இருந்தாரோ? அதேபோல் தேமுதிக தொடங்கப்பட்ட போதும் அக்கட்சியின் மூத்த வழிகாட்டியாக செயல்பட்டார். அதுபோல தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரையில் தற்போது அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கின்றது செல்லும் இடங்களில் கூட்டங்கள் கூடுகிறது. ஆனால் அவற்றை எப்படி ஒருங்கிணைப்பது, சட்டரீதியாக அனுமதிகள் பெறுவது எப்படி?, அரசியல் ரீதியாக பதிலடி கொடுப்பது எப்படி? உள்ளிட்ட பல்வேறு சவால்கள் சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே அவற்றை சரி செய்யக்கூடிய அவற்றிற்கு ஆலோசனை வழங்கக்கூடிய ஒரு முக்கிய ஆலோசகராக செங்கோட்டையன் செயல்படுவார் எனக்கூறப்படுகிறது.
எனவே களப்பணியில் செங்கோட்டையனுக்கு ஏராளமான அனுபவம் இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரைக்கும் அங்க இருக்கக்கூடிய தலைவர்கள் அரசியலுக்கு புதிது, களத்திற்கும் புதிது. அப்படி இருக்கையில் செங்கோட்டையனுக்கு எந்த மாதிரியான பதவி கொடுத்தால் சரியாக இருக்கும் என்று பல கேள்விகள் எழுந்து வந்தன. அந்த சூழலில் தான் விஜய்க்கு அடுத்தபடியான பொறுப்பு செங்கோட்டையனுக்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரைக்கும் ஏற்கனவே பொதுச்செயலாளர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அதாவது கொள்கை பரப்புச் பொதுச்செயலாளர், தேர்தல் மேலாண்மை பிரச்சார பொதுச்செயலாளர் என்று பொதுச்செயலாளர் இருக்கிறார்கள். அதே வரிசையில் தான் செங்கோட்டினுக்கும் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுச்செயலாளர் பதவி மட்டுமின்றி, செங்கோட்டையனுக்கு விஜய்க்கு அடுத்தப்படியாக முடிவெடுக்கும் அளவிற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தில் 28 பேர் கொண்ட நிர்வாக குழு ஒன்றை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டின் கீழ் விஜய் அமைத்திருந்தார். அந்த 28 பேர் கொண்ட நிர்வாக குழு செங்கோட்டையனுடைய கட்டுப்பாட்டில் இயக்கும் எனக்கூறப்படுகிறது. அவர் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள், ஆலோசனைகள் எல்லாம் நேரடியாக விஜய்க்கு தெரிவிப்பார். அந்த முடிவுகளிலிருந்து ஏதேனும் ஒரு தீர்க்கமான முடிவை விஜய் எடுப்பார் என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு வானளாவிய அதிகாரம் தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையனுக்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அடுத்தபடியாக ஜெயலலிதா அவர்களுடைய காலகட்டத்திலிருந்தே சுற்றுப்பயண விவரங்களை திட்டமிடுவதில் செங்கோட்டையன் முக்கிய பங்கு வகித்துள்ளார். தற்போது விஜய் தனது சுற்றுப்பயணத்தை 2ம் கட்டமாக தொடங்கியுள்ள நிலையில், இனி வரும் பயண திட்டங்களை செங்கோட்டையன் தான் முடிவு செய்வார் எனக்கூறப்படுகிறது. அதேபோல செங்கோட்டையன் உடைய ஆதரவாளர்கள் யாரெல்லாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்களோ, அவர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் எனக்கூறப்பட்ட நிலையில், கோபிசெட்டிபாளையத்திலிருந்து பேருந்து மூலம் வந்த அவரது ஆதரவாளர்கள் பனையூர் அலுவலகத்தில் குவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சீக்ரெட் சர்வே... கையில் ரிப்போர்ட் உடன் தவெகவிடம் டீல் பேசும் ஓபிஎஸ் வாரிசு...!