தூக்கி எறிந்த என்னை தாங்கிப் பிடித்தவர் விஜய்... தவெக போராட்டக் களத்தில் தழுதழுத்த செங்கோட்டையன்...!
அதிமுகவில் எத்தனை பேரை ஆட்சி கட்டிலில் அமர வைக்க உறுதுணையாக செயல்பட்டேன் என்பது அனைவருக்கும் தெரியும்.
சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்படுத்தி போதை பொருட்களை தடுக்க வேண்டும், தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
ஈரோடு காளை மாடு சிலை அருகே ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார். போராட்டக்களத்தில் அவர் உரையாற்றியதாவது: 45 ஆண்டு காலம். அதிமுகவில் எத்தனை பேரை ஆட்சி கட்டிலில் அமர வைக்க உறுதுணையாக செயல்பட்டேன் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரே நொடியில் என்னை தூக்கி எறிந்தார்கள். அப்போது, தாங்கி பிடித்தவர் விஜய்.
ஜெயலலிதாவின் புகைப்படத்தை எனது பாக்கெட்டில் வைத்துக் கொள்ள அனுமதி தந்தவர் விஜய். தவெகவில் ஜனநாயகம் இருக்கிறது, ஆனால் ஜனநாயகத்தை முடக்குகின்றனர். சென்சார் போர்டில் உடல்நிலை சரியில்லை என்று சொல்லி வேடிக்கையாக நடந்து கொள்கின்றனர். ஒன்றிய அரசு எப்படி இயங்குகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். ஜனநாயகம் படத்தை முடக்கினாலும் ஜனநாயகத்தை காக்கக்கூடிய தலைவராக விஜய் இருப்பார்.
இதையும் படிங்க: பாலியல் குற்றம் தான் "டெய்லி ஹெட் லைன்"... இதுதான் உங்க "நம்பர் ஒன்" சாதனையா சிஎம் சார்? கொந்தளித்த அருண்ராஜ்..!!
SOP மூலம் தவெக-விற்கு மட்டும் நெருக்கடி தருகின்றனர். 23 கட்சிகள் தவெக.வை தாக்குகின்றன. அடுத்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்பதால் கட்சிகள் அனைத்தும் எங்களை தாக்குகின்றன. இந்த தாக்குதல் 35 நாட்களுக்குள் முடிந்து போகும். எதிர்க்கட்சி வரிசையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடிய நாம் அடுத்து ஆளுங்கட்சியாக பாராட்டு விழா நடத்த உள்ளோம் என காரசாரமாக பேசினார்.
இதையும் படிங்க: தினந்தினம் பெரும் கொடுமை... நெஞ்சு பதறுது... கல்லாப்பெட்டி கூட்டணி தான் முக்கியமா? பந்தாடிய விஜய்..!!