மே 4..! தேர்தல் முடிவுகளை உற்றுநோக்கும் தமிழகம்..! வேட்பாளர்களை சந்திக்க விஜய் திட்டம்..!
ஏப்ரல் 30ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகள் எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாகப் போட்டியிட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மே 4 அன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அதன் முடிவுகள் படிப்படியாக வெளியாகும். இந்த முடிவுகள் தமிழ்நாட்டின் அடுத்த அரசியல் சூழலை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, தவெக தலைவர் விஜய் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார். 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. எந்தவித கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இந்த நிலையில் ஏப்ரல் 30-ஆம் தேதி சென்னையில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “திமுகவை அழிச்சே ஆகனும்...” - ஒற்றை புள்ளியில் ஒன்றிணைந்த விஜய் - எடப்பாடி... மீண்டும் ரகசிய பேச்சுவார்த்தை...!
தேர்தல் நடைபெற்று முடிந்த உடனேயே, கட்சியின் வேட்பாளர்களுடன் நேரடியாக உரையாடி, அவர்களின் அனுபவங்கள், கள நிலவரம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்க இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவெகவின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: குழந்தைகளை பகடை காய்களாக பயன்படுத்துவதா? - எதிர்பாராத இடத்தில் இருந்து விஜய்க்கு வந்த எச்சரிக்கை...!