30 பேரை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்!! சீரியல் கில்லருக்கு கிடைத்தது தண்டனை!
அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில் முஜுரிசி மோசேவை உகாண்டாவின் வரலாற்றில் மிகக் கொடூரமான சீரியல் கில்லர் மற்றும் கன்னிபால் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 15 ஆண்டுகளில் 38 பேரை கொடூரமாகக் கொலை செய்து அவர்களின் மாமிசத்தை தின்றதாக குற்றம் சாட்டப்பட்ட சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டுள்ளார். முஜுரிசி மோசே அல்லது மோசஸ் முஜுரிசி என்ற அந்த நபர் 2010 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உகாண்டாவின் மசாகா, இபந்தா மற்றும் காசோ ஆகிய மாவட்டங்களில் பல கொலைகளை அரங்கேற்றியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
வீடுகளுக்குள் புகுந்து அங்கிருப்போரை வெட்டிக் கொலை செய்வதும் ஆசை வார்த்தைகளைக் கூறி வரவழைத்தும் கொலை செய்துள்ளார் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பின்னர் அந்த உடல்களை சமைத்து சாப்பிட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. சில சம்பவங்களில் குடும்பங்களை முழுமையாகத் தாக்கி மச்செட் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பலமுறை கைது செய்யப்பட்டும் தப்பியோடிய இந்த நபர் தற்போது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆந்திராவை புரட்டிப்போட்ட ‘அர்னாப்’ புயல்... இரவோடு, இரவாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு... என்னென்ன செஞ்சிருக்கு பாருங்க...!
உகாண்டா ராணுவத் தளபதி ஜெனரல் முஹூசி கைனேருகாபா இந்த விவகாரம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில் முஜுரிசி மோசேவை உகாண்டாவின் வரலாற்றில் மிகக் கொடூரமான சீரியல் கில்லர் மற்றும் கன்னிபால் என்று குறிப்பிட்டுள்ளார்.
2010 முதல் 2025 வரை மசாகா, இபந்தா, காசோ மாவட்டங்களில் 38 பேரைக் கொன்று உண்டதாகக் கூறி பொதுவெளியில் விசாரணை நடத்தி மரண தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கை குறித்து பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சந்தேக நபரின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இதே பகுதியில் நடந்த கொலைகள் தொடர்பான வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் முன்பு பலமுறை கைது செய்யப்பட்டு தப்பித்ததாகவும் அல்லது விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. தற்போது அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை தொடர்கிறது.
இதையும் படிங்க: இஸ்ரேலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு! 20 ஆண்டு பிரதமர் நெதன்யாகு பின்னடைவு!