சொன்னா நம்புங்க! ஆற்றில் மிதந்தது தீர்வு காணப்பட்ட மனுக்கள்... ஆட்சியர் விளக்கம்
ஆற்றில் மிதந்தது உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்கள் என்று தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 2025 ஜூலை 15 முதல் நவம்பர் 2025 வரை தமிழ்நாடு முழுவதும் 10,000 சிறப்பு முகாம்களை நடத்துவதற்காக அறிவிக்கப்பட்டது. இந்த முகாம்களில், மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனு வடிவில் அளிக்கலாம், மேலும் அரசு அதிகாரிகள் அவற்றை உடனடியாக பரிசீலித்து தீர்வு வழங்குவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. சாதி சான்று, பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஆதார் திருத்தங்கள், ரேஷன் அட்டை முகவரி மாற்றம் போன்ற பல்வேறு சேவைகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் இத்திட்டத்தின் மூலம், மக்களின் கோரிக்கைகளையும் புகார்களையும் நேரடியாகப் பெற்று, அவற்றை விரைவாகவும் வெளிப்படையாகவும் தீர்க்க அரசு முயற்சித்து வருகிறது. இருப்பினும், மனுக்கள் குப்பையில் வீசப்பட்டதாக வெளியான தகவல்கள் இத்திட்டத்தின் செயல்பாட்டு நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளன.
இதற்கு எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மக்களின் குறைகள் காற்றில் பறக்க விடப்பட்டதாகவும், குப்பையில் கொட்டப்பட்டதாகவும் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். இதனிடையே ஆற்றில் மிதந்த மனுக்கள் குறித்து தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் திருபுவனம் வைகை ஆற்றில் மிதந்து விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். பட்டா மாறுதல் வேண்டி அளிக்கப்பட்டு உடனே தீர்வு காணப்பட்ட மனுக்களே ஆற்றில் மிதந்ததாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் திமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்.. கடுமையாக சாடிய அதிமுக..!!
13 மனுக்களின் நகல்கள் என கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் தகவல் வெளியானதாகவும் கூறினார். திருபுவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடம் விசாரணை நடைபெறுவதாகவும் விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை இடியட் கேக்குறதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது! போயா.. டி.ஆர் பாலு ஆவேசம்..!