×
 
☰

விஜயவாடாவை உலுக்கிய கொடூர கொலை! பெண்ணின் உடலை 9 துண்டுகளாக வெட்டி கால்வாயில் வீசிய கசாப்புக்கடைக்காரர்!!

சமூக வலைதளங்களில் அந்த உடலின் புகைப்படங்கள் வெளியான நிலையில், பெண்ணின் கையில் இருந்த டாட்டூவை அடையாளமாக வைத்து அவர் கல்யாணி என்பதை உறவினர்கள் உறுதி செய்தனர்.

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கசாப்புக்கடை நடத்தி வந்த நபர் மற்றும் அவரது உதவியாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜயவாடா பவானிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷபி, 35. இவர் அப்பகுதியில் கசாப்புக்கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான கல்யாணி, 28, என்பவருக்கும் பழக்கம் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் கல்யாணி, ஷபியுடனான தொடர்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

கடந்த 17-ம் தேதி முதல் கல்யாணியை காணவில்லை என அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் இப்ராஹிம்பட்டினம் பகுதியில் உள்ள கூலிங் கால்வாயில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கிடப்பதாக தகவல் பரவியது.

இதையும் படிங்க: மகனைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்ற ஆந்திர பெண்! ஒரே விபத்தில் மாமியார், மருமகள் பலி!

சமூக வலைதளங்களில் அந்த உடலின் புகைப்படங்கள் வெளியான நிலையில், பெண்ணின் கையில் இருந்த டாட்டூவை அடையாளமாக வைத்து அவர் கல்யாணி என்பதை உறவினர்கள் உறுதி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

சந்தேகத்தின் அடிப்படையில் ஷபியை பிடித்து விசாரித்தபோது, கல்யாணியை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் கல்யாணியை கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

மேலும், உடலை பல துண்டுகளாக வெட்டி, உதவியாளர் குருவுலுவின் உதவியுடன் அவற்றை எடுத்துச் சென்று கொல்லப்பள்ளி பகுதியில் உள்ள கூலிங் கால்வாயில் வீசியதாக ஷபி தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

இதையடுத்து ஷபி மற்றும் குருவுலுவை போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கான முழுமையான காரணம், சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் விஜயவாடா பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தூங்கிக் கொண்டிருந்த தாயை சேலையால் இறுக்கி கொன்ற மகள்? நகை, பணத்துக்காக நடந்த பயங்கரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share