கணவருடன் கசந்து போன காதல் வாழ்க்கை... தகாத உறவில் இருந்த மனைவியை கூலிப்படை வைத்து கொன்ற ராணுவ வீரர்...!
சாயல்குடி அருகே இளம்பெண் கொலை தகாத உறவால் கணவரே ஆள் வைத்துக் கொன்றது அம்பலமானது
சாயல்குடி அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பலருடன் தகாத உறவில் இருந்ததால் அவரது கணவரே ஆள் வைத்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் உறுதியானதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே நரிப்பையூர் வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வயணன் மகன் விஜயகோபால் இவரும், தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடை சேர்ந்த ஜெர்மின் (36) இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 14 வயதில் ஒரு பெண், 10 வயதில் ஒரு ஆண் இரண்டு குழந்தைகள் உள்ளன. விஜயகோபால் உத்தரகாண்ட்டில் எல்லை பாதுகாப்பு துணை ராணுவத்தில் பணியாற்றி வந்தார். ஜெர்மின் வீட்டில் டெய்லர் கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கணவர் மனைவி இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் 17 ந் தேதி நள்ளிரவு ஜெர்மின், வெட்டுகாடு வீட்டில் தனது குழந்தைகளுடன் உணவு அருந்திக் கொண்டுள்ளார். அப்போது அங்கு முகத்தை துணியால் மூடி வந்த இரண்டு மர்ம நபர்கள் ஜெர்மினை ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி விட்டு தப்பித்து ஓடி விட்டனர்.
இதையும் படிங்க: ஜெகதீப் தன்கர் ராஜினாமா! அடுத்த துணை ஜனாதிபதி யார்? நியமனம் எப்படி நடக்கும்?
இந்த கொலை செய்யப்பட்ட ஜெர்மினியின் பெற்றோர் மாவட்ட எஸ்.பி சந்தீஷ்யிடம் 18ந் தேதி கொடுத்த புகார் மனுவில், ஜெர்மினியை அவரது கணவர் விஜயகோபால் தான் ஆள் வைத்து கொலை செய்ய வாய்ப்பு உள்ளது, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்நிலையில் உத்தரக்காண்டில் பணியில் இருந்த விஜயகோபாலை சாயல்குடி போலீசார் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த 3 நாட்களாக நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இறந்த ஜெர்மினியுடன் திருமணம் ஆகி குழந்தை பிறந்த சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இந்நிலையில் ஜெர்மினி பெயரில் வீட்டு கட்டியதால், அவர் வீட்டை அபகரித்துக் கொண்டதாகவும், மேலும் தனக்கு மாதந்தோறும் ரூபாய் ரூ. 17,000 ஜீவம்சம் வேண்டும் என்று முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார், இந்த நிலையில் அவர் பலருடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து தனது குடும்பத்தினருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. இதனால் ஆட்களை வைத்து கொலை செய்ய திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் விஜயகோபால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தகப்பனார் வயணம் பெயரை தவிர யார் பெயரையும் விஜயகோபால் விசாரணையில் சொல்லவில்லை என தெரிகிறது.
இந்த கொலையில் 4க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருப்பதாகவும் விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் சாயல்குடி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: என் வீட்டுக்காரர் தான் எல்லாமே! நானும் உங்களோட ஒருத்திங்க... நெகிழ்ந்து பேசிய துர்கா ஸ்டாலின்