பெண்கள், நடிகைகளை வக்கிரமாக சித்தரித்த கயவர்கள்! ஆபாசத்தின் உச்சம்!! 'க்ராக்'நடவடிக்கை!
'எக்ஸ்' சமூக வலைதள நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான, 'க்ராக்' வசதியை தவறாக பயன்படுத்தி பெண்களை ஆபாசமாக சித்தரித்து இழிவுபடுத்தியது தொடர்பாக 600 கணக்குகள் நீக்கி உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக வலைதள தளமான எக்ஸ் (முன்பு ட்விட்டர்) அறிமுகப்படுத்திய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான 'க்ராக்' (Grok) பலரால் மிகவும் தவறான வகையில் பயன்படுத்தப்பட்டு வருவது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்த AI கருவி பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் பதிவேற்றும் படங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய படங்களையும் உருவாக்கி தரும் திறன் கொண்டது. தமிழ் உட்பட பல மொழிகளில் சுதந்திரமாக பதில் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது, மற்ற AI கருவிகளை விட குறைவான கட்டுப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சுதந்திரம் சிலருக்கு தவறான பயன்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது. சில பயனர்கள் போலி கணக்குகள் மூலம் பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி, அந்த படங்களில் ஆடைகளை குறைத்து அல்லது முழுவதுமாக நீக்கி, பாலியல் ரீதியில் இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமான படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். இது டீப் ஃபேக் தொழில்நுட்பத்தைப் போன்று பெண்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை மிகக் கொடூரமாக பாதிக்கும் செயலாகும்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமியை சீரழித்த காம கொடூரன்கள்!! திமுக நிர்வாகி உட்பட 15 பேர் கைது! திருச்சியில் அதிர்ச்சி!
இத்தகைய சம்பவங்கள் அதிகரித்ததால் மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, டிஜிட்டல் தளங்களை கண்காணிக்கும் அதிகாரம் கொண்ட மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) எக்ஸ் நிறுவனத்துக்கு கடும் நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீசில், 'க்ராக்' AI தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியுள்ளது என்றும், ஆபாசம், நிர்வாணம், பாலியல் உள்ளடக்கங்கள் உருவாக்கப்படாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்களை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்றும், அனைத்து சட்டவிரோத உள்ளடக்கங்களையும் நீக்க வேண்டும் என்றும்,
அத்தகைய உள்ளடக்கங்களை பகிர்ந்த பயனர்களை தடை செய்ய வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கை அறிக்கையை 72 மணி நேரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. விதிகளை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
இந்த நோட்டீசுக்கு பதிலளித்துள்ள எக்ஸ் நிறுவனம், தனது தொழில்நுட்பத்தில் குறைபாடு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது. இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு செயல்படுவோம் என்று உறுதியளித்துள்ளது.
நடவடிக்கையாக 3,500-க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள் உள்ளிட்ட சட்டவிரோத உள்ளடக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற உள்ளடக்கங்களை பகிர்ந்த 600 கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இனி இத்தகைய பகிர்வுகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளது.
இந்த சம்பவம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க டிஜிட்டல் தளங்கள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டிய அவசியத்தை இது மீண்டும் நினைவூட்டுகிறது. மத்திய அரசு இத்தகைய விவகாரங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது.
இதையும் படிங்க: "ஸ்டேஷனே இல்லாத ஊர்ல எப்படி டீ வித்தாரு?" பாஜக ஆட்சியை தகர்ப்போம் - நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்!