சாதி கொடி கட்டுவதில் மோதல்: கோயில் திருவிழாவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு... சிறுவனிடம் போலீஸ் தீவிர விசாரணை...!
கடையத்தில் கோவில் திருவிழாவில் சமுதாய ரீதியாக கொடி காட்டியதால் தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு
தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முப்புடாதி அம்மன் கோவிலில் மாசி மாத பெருந்திருவிழா கடந்த வாரம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சுமார் பத்து நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தைச் சேர்ந்த மண்டகபடி தாரர்கள் விழாவை நடத்தினர்.
அப்போது ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் விழாவின் போது சமுதாய ரீதியான கொடியை காட்டி ஆடியதாக கூறப்படுகிறது. இதற்கு மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசாரும் எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் கொடி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்த தரப்பைச் சேர்ந்த செல்வ கணேஷ் (24) என்பவர் நேற்று கடையம் மெயின் பஜாரில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் திடீரென செல்வ கணேசன் பின்புற கழுத்துப் பகுதியில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதையும் படிங்க: போலி மனித உரிமை அமைப்புகள் மீது நடவடிக்கை..! அனைத்து மாநில அரசுகளுக்கும் NHRC நோட்டீஸ்!
உடனடியாக அப்பகுதியினர் செல்வகணேஷை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 17 வயது சிறுவனை பிடித்து திருவிழா தகராறு காரணமாக தான் இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதும் காரணமா எனவும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!