கோவையிலும் வந்தாச்சு ஜாம்பி போதை!! இளசுகள் டார்கெட்! பதறும் பெற்றோர்கள்!
கோவையில் ‘ஜாம்பி’ போதை பயன்பாடு பரவல்? – இளைஞர் அசையாமல் நிற்கும் வீடியோ வைரல், போலீஸ் விசாரணை!
கோவை மாவட்டத்தில் ‘ஜாம்பி’ என அழைக்கப்படும் ஆபத்தான போதைப்பொருள் பயன்பாடு பரவி வருவதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசையாமல் நீண்ட நேரம் நிற்பது, உடல் இயக்கம் முற்றிலும் குறைவது போன்ற நிலையை ஏற்படுத்தும் இந்த போதை மருந்து குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை என்று போலீசார் கூறி வந்த நிலையில், உக்கடம், கரும்புக்கடை ஆசாத் நகர் பகுதியில் ஒரு இளைஞர் அசையாமல் நின்றுகொண்டிருக்கும் வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில், இளைஞர் ஒருவர் நீண்ட நேரம் அசையாமல் நிற்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அருகில் சில இளைஞர்கள் போதை ஊசி செலுத்திக்கொள்வது போன்ற காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. போதைப் பொருள் வாங்க பணம் இல்லாத இளைஞர்கள் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தனியார் விடுதியில் தீ!! அலறித் துடித்த பெண்கள்!! உயிர் பயத்தில் 50 பெண்களின் திக் திக் நிமிடங்கள்!
இதுகுறித்து கோவை போலீசாரிடம் கேட்டபோது, “வீடியோவில் வரும் இளைஞர் அசையாமல் இருப்பது உண்மையில் போதைப்பொருள் பயன்பாடு காரணமா என்பது தெரியவில்லை. வீடியோவின் உண்மைத்தன்மை, அதில் உள்ள நபர்கள் யார், எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தனர்.
கோவையில் இதுவரை ‘ஜாம்பி’ போதை பயன்பாடு குறித்து உறுதியான தகவல் இல்லை என்று போலீசார் கூறி வந்தாலும், சமூக வலைதளங்களில் பரவும் இந்த வீடியோக்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளில் காணப்படும் இத்தகைய போதைப் பழக்கம் கோவையிலும் பரவினால், இளைஞர்கள் மத்தியில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
உடனடியாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். கோவை போலீசார் விரைவில் விசாரணை முடிவுகளை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பால் கேனில் சிக்கிய தலை! மணிக்கணக்கில் நீடித்த அவஸ்தை!! ராஜஸ்தான் இளைஞரை பத்திரமாக மீட்ட மக்கள்!