10 மணி நேரம் போர் நிறுத்தம்.. நிம்மதி பெருமூச்சு விடும் காசா.. கவலை தோய்ந்த முகத்தில் சற்றே ஆறுதல்..!
பாலஸ்தீனத்தின் காசாவில் மக்கள் அடர்த்தி மிக்க மூன்று பகுதிகளில் மக்கள் உணவின்றி பட்டினியால் தவிப்பதால் அங்கு நாள்தோறும், 10 மணிநேர சண்டை நிறுத்தத்தை இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
காசாவுல இஸ்ரேலும் ஹமாஸ் பயங்கரவாதிகளும் மோதிக்கிட்டு இருக்குறது ஒன்றரை வருஷத்துக்கு மேல நீடிக்குது. இந்தப் போரால 60,000-த்துக்கு மேல பேர், பயங்கரவாதிகளும் பொதுமக்களுமா சேர்ந்து கொல்லப்பட்டிருக்காங்க. இந்த மோதல் காரணமா காசாவுல உணவு, குடிநீர், மருந்து எல்லாம் பெரிய தட்டுப்பாடா இருக்கு. மக்கள் பட்டினியால அவதிப்படுறாங்க.
முன்னாடி ஐ.நா. மூலமா நூறு, நூறு டிரக் உணவு, மருந்து, தண்ணீர்னு வந்துட்டு இருந்தது. ஆனா, இஸ்ரேல் சொல்றது, “இந்த உதவி பொருட்களை ஹமாஸ் திருட்டுத்தனமா எடுத்துக்குது”ன்னு. அதனால ஐ.நா. டிரக்குகளுக்கு இஸ்ரேல் தடை விதிச்சுடுச்சு. இதுக்குப் பதிலா, கடந்த மே மாதம் முதல் அமெரிக்காவுல பதிவு செய்யப்பட்ட காசா மனிதாபிமான அறக் கட்டளை (GHF) மூலமா நாலு இடங்கள்ல உணவு, பொருட்கள் விநியோகம் பண்ண ஆரம்பிச்சாங்க.
ஆனா, இந்த முறையில தினமும் 65 டிரக் மட்டுமே அனுமதிக்கப்படுது. இது முன்ன இருந்த 500 டிரக்கோட ஒப்பிடும்போது ரொம்ப கம்மி. இதனால, உதவி கிடைக்காம மக்கள் இஸ்ரேல் படைகளோட மோதுறாங்க. இந்த மோதல்கள்ல, கடந்த மே மாதம் முதல் 1,000-த்துக்கு மேல பேர், பெரும்பாலும் உணவு தேடி வந்தவங்க, இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு, வான்தாக்குதல்ல கொல்லப்பட்டிருக்காங்க.
இதையும் படிங்க: ஹிஸ்புல்லா தளபதியை கொன்னுட்டோம்!! இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அறிவிப்பு!!
இதுல பெரும்பாலான சம்பவங்கள் GHF உணவு விநியோக மையங்களுக்கு அருகே நடந்திருக்கு. காசாவுல பட்டினி பிரச்சினை இப்போ மிகப் பெரிய அளவுல உருவாகியிருக்கு. WHO சொல்றது, “இது மனிதனால உருவாக்கப்பட்ட பஞ்சம்”னு. 133 பேர், அதுல 80-க்கும் மேல குழந்தைகள், பட்டினியால செத்திருக்காங்க. இந்த நிலைமை காரணமா, இஸ்ரேலுக்கு உலக நாடுகளிடமிருந்து பெரிய அழுத்தம் வந்துட்டு இருக்கு.
ஐ.நா., 100-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், “போரை நிறுத்து, உதவி பொருட்களை தடையில்லாம அனுப்பு”ன்னு கோரிக்கை வைக்குது. இந்த அழுத்தத்துக்கு பதிலா, இஸ்ரேல் இப்போ சில மாற்றங்களை அறிவிச்சிருக்கு.ஜூலை 27-ல இஸ்ரேல் ராணுவம் சொல்லிச்சு, “காசா சிட்டி, டெய்ர் அல்-பலாஹ், மவாசி இந்த மூணு மக்கள் நெருக்கமான இடங்கள்ல தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10 மணி நேரம் தாக்குதலை நிறுத்துவோம்”னு.
இந்த நேரத்துல உணவு, மருந்து டிரக்குகள் போக வழி செய்யப்படுமாம். மேலும், மாவு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை வான்வழியா இறக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, ஐ.நா. சொல்றது, “இந்த வான்வழி உதவி செலவு அதிகம், ஆபத்து நிறைஞ்சது, பெரிய அளவுல பயனில்லை”ன்னு. இஸ்ரேல் இன்னும் சொல்றது, “ஹமாஸ் தான் உதவி பொருட்களை திருடுது, போரை நீட்டிக்குது”ன்னு. ஆனா, ஹமாஸ் இந்த குற்றச்சாட்டை மறுக்குது.
இந்த புது முயற்சிகள் இருந்தாலும், காசாவுல பஞ்சம், உயிரிழப்பு பிரச்சினை முடியல. மக்கள் இன்னும் தினமும் உணவுக்காக உயிரைப் பணயம் வெச்சு ஓடுறாங்க. உலக நாடுகள் இஸ்ரேல முழு போர் நிறுத்தத்துக்கு வற்புறுத்துறாங்க. இந்த நிலைமை எப்ப மாறும்னு தெரியல, ஆனா இப்போதைய நிலையில மக்கள் படுற கஷ்டம் கொஞ்சநஞ்சமில்லை.
இதையும் படிங்க: பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த பிரான்ஸ்.. கொதித்தெழுந்த நெதன்யாகு! முற்றுகிறது மோதல்..!