×
 

லாரி மீது மோதிய மினி பஸ்! இந்தியர்கள் 7 உடல் நசுங்கி பலி! துபாயில் நேர்ந்த சோகம்!

எமிரேட்ஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த லாரி ஒன்று திடீரென பழுதானது. அந்த லாரி சாலையின் நடுவில் நிறுத்தப்பட்டு இருந்தது.

துபாயில் ஏற்பட்ட சாலை விபத்தில் 7 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எமிரேட்ஸ் சாலையில் நேற்று நடைபெற்ற இந்த விபத்தில் மேலும் 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்த விவரங்கள் வருமாறு: எமிரேட்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று திடீரென பழுதடைந்தது. லாரி ஓட்டுநர் சாலையின் நடுவில் அதை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அதே சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த மினி பஸ், முன்னால் நின்ற லாரியை எதிர்பாராத விதமாக மோதியது. பலத்த அதிர்ச்சியில் மினி பஸ் முழுவதும் சேதமடைந்தது.

இந்த கொடூர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அனைவரும் இந்தியர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: டூ வீலர் மீது மோதிய பஸ்!! அதிகாலை நடந்த கோரம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!!

விபத்து நடந்த உடனேயே துபாய் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சாலையை சீரமைக்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. துபாய் அதிகாரிகள் விபத்துக்கான காரணங்களை விரிவாக விசாரித்து வருகின்றனர். லாரியை சாலையின் நடுவில் நிறுத்தியதில் ஏதேனும் பாதுகாப்பு விதிமீறல் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். உயிரிழந்தோரின் உடல்களை நாடு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் சாலை விபத்துகளால் அடிக்கடி உயிரிழப்பது வருத்தமளிக்கிறது. இந்த சம்பவம் துபாயில் பணியாற்றும் இந்திய சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துபாய் அதிகாரிகள் விபத்து குறித்து விரைவில் விரிவான அறிக்கை வெளியிட உள்ளனர்.

இதையும் படிங்க: நடுக்கடலில் கைவிடப்படும் கப்பல்கள்! இந்திய மாலுமிகளே அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் பகீர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share