×
 

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி கோர விபத்து... 8 பேர் உடல் சிதைந்து பலி... நடுவானில் நடந்து என்ன?

இந்தோனேசியாவின் மேற்கு களிமந்தன் மாநிலத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் செய்த எட்டு பேரும் உயிரிழந்து உள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். 

நேற்று காலை மெலாவியில் உள்ள ஒரு பண்ணை பகுதியிலிருந்து புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் ஏர்பஸ் H130 ரக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தேடுதல் பணியின் போது ஹெலிகாப்டரின் வால் பகுதி கண்டறியப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பலத்த மழையும் கடினமான நிலப்பரப்பும் மீட்பு பணிகளுக்கு சவாலாக அமைந்துள்ளன. 

"விபத்து நடந்த அல்லது தொடர்பு துண்டிக்கப்பட்ட இடம், செங்குத்தான மலைப்பாங்கான நிலப்பரப்பைக் கொண்ட அடர்ந்த வனப்பகுதியாகும்.ஷாஃபி, தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 3 கி.மீ (2 மைல்) மேற்கே, ஹெலிகாப்டரின் வால் பகுதி என சந்தேகிக்கப்படும் சிதைவுகளை மீட்புக் குழுவினர் கண்டெடுத்ததாகவும் இந்தோனேசியாவின் மீட்பு அமைப்பின் தலைவர் முகமது ஷாஃபி தெரிவித்துள்ளார். 

விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஆறு பயணிகளும் இரண்டு பணியாளர்களும் உயிரிழந்ததாக உள்ளூர் மீட்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்லார். 

இதையும் படிங்க: அனல் தெறிக்கும் அரசியல் களம்... இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி தமிழகம் வருகை... எங்கெல்லாம் பரப்புரை?

ராணுவம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட மீட்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை அன்று தரைவழிப் பாதைகள் வழியாக விபத்து நடந்த இடத்தை அடைய முயன்றனர். அந்தத் தோட்டப் பகுதி, சித்ரா மகோடா என்ற இந்தோனேசிய பாமாயில் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும், ஹெலிகாப்டர் மேத்யூ ஏர் நுசந்தாரா நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும் ஷாஃபி கூறினார்.

இதையும் படிங்க: "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share